சொல்லிட்டாங்க...

குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை நாடாளுமன்றத்தில் நாங்கள் தாக்கல் செய்ததுமே, காங்கிரசுக்கு வயிற்றெரிச்சல் ஏற்பட்டு விட்டது.

- உள்துறை அமைச்சர் அமித்ஷா

உள்ளாட்சி தேர்தலில் தலைவர் பதவியை ஏலம் விடுவது தொடர்பாக ஏலம் விடுபவர்கள் மற்றும் ஏலம் எடுப்பவர்களின் தலைவர் பதவி செல்லாது என உடனடியாக அறிவிக்க வேண்டும்.

- விசிக தலைவர் திருமாவளவன்

மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்திற்கு மத்திய அரசு ஒதுக்கிய நிதி போதுமானதாக இல்லை.

- பாமக நிறுவனர் ராமதாஸ்

தேர்தலை மனதில் கொள்ளாமல் குறிக்கோள், கொள்கைக்காக இயங்கும் கட்சி நாங்கள் தான்.

- தமாகா தலைவர் ஜி.கே.வாசன்

Related Stories: