திருப்பதியில் நாளை முதல் சுப்ரபாதம் சேவை ரத்து: தேவஸ்தானம் அறிவிப்பு

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் மார்கழி மாதத்தை முன்னிட்டு, நாளை முதல் சுப்ரபாதம் சேவை ரத்து செய்யப்படுவதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. வைணவ திருத்தலங்களில் மார்கழி மாதம் 1ம் தேதி  முதல் அந்த மாதம் முழுவதும்  சுப்ரபாத சேவை ரத்து செய்யப்பட்டு ஆண்டாள் எழுதிய திருப்பாவை பாசுரம் பாடியபடி சுவாமியை துயில் எழுப்பக்கூடிய பூஜைகள் நடைபெறுவது வழக்கம். மார்கழி மாதம் இன்று இரவு 11.47 மணிக்கு தொடங்குவதால்  திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நாளை முதல் சுப்ரபாத சேவை ரத்து செய்யப்பட்டு 12 ஆழ்வார்களில் ஒருவரான ஆண்டாள் தாயார் எழுதிய திருப்பாவை ஜீயர்கள் முன்னிலையில் பாடப்பட்டு சுவாமியை எழுப்பப்படவுள்ளது. மார்கழி மாதம் நிறைவுபெறும் வரை (ஜனவரி 14ம் தேதி வரை)  திருப்பாவை சேவை நடைபெறும். ஜனவரி 15ம் தேதி முதல் சுப்ரபாத சேவையுடன் ஏழுமலையான் கோயிலில் சுவாமி துயில் எழுப்பப்பட உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

Related Stories: