×

திருவாரூர் அருகே நள்ளிரவில் துணிகரம் தேர்தல் அலுவலக பூட்டை உடைத்து திருட்டு: டெபாசிட் தொகை தப்பியது

திருவாரூர்: திருவாரூர் அருகே தேர்தல் அலுவலக பூட்டை நள்ளிரவில் மர்ம நபர்கள் உடைத்து பணத்தை திருடி சென்றனர்.  திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட வடகண்டம் ஊராட்சியில் உறுப்பினர் பதவிக்கான வேட்புமனுத்தாக்கல் நேற்று முன்தினம் 6வது நாளாக நடைபெற்றது. உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் கிளரியம் வேட்புமனு பெற்று வருகிறார். நேற்று முன்தினம் வேட்புமனு பெறுவது முடிவடைந்தது. இரவு 8 மணியளவில் ஊராட்சி மன்ற அலுவலகத்தை ஊராட்சி செயலாளர் கணபதி என்பவர் பூட்டி விட்டு சென்றுவிட்டார். 

நேற்று காலையில் அந்த வழியாக சென்றவர்கள் ஊராட்சி மன்ற பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனே, செயலாளர் கணபதிக்கு தகவல் அளித்தனர். அவர் வந்து பார்த்தபோது பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில்வைத்திருந்த ₹1,500 பணம் திருட்டு போயிருந்தது தெரியவந்தது.

இதுதொடர்பாக கணபதி குடவாசல் போலீசில் அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை தேடி வருகின்றனர். அதேவேளையில், மொத்தம் 22 வேட்பு மனுக்கள் மற்றும் வேட்பாளர்களின் டெபாசிட் தொகை ஆகியவை மற்றொரு பீரோவில் பத்திரமாக இருந்தது. இந்த பீரோவை உடைக்க முடியாததால் தப்பியது.

Tags : Thiruvarur ,robbery ,Virarmur , Thiruvarur,near ,Virarmur
× RELATED வாக்கு சாவடிகளுக்கு அனுப்புவதற்காக...