×

குற்றாலம் அருவிகளில் குளிக்க அனுமதி

தென்காசி:  குற்றாலம் மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில், நேற்று முன்தினம் காலை முதல் சாரலுடன் மழை பெய்தது. இதனால் அருவிகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்தது. மெயினருவியில் பாதுகாப்பு வளைவை தாண்டி தண்ணீர் விழுந்தது. பழைய குற்றால அருவி, புலியருவி, சிற்றருவி, ஐந்தருவி என அனைத்து அருவிகளிலும் தண்ணீர் அதிகமாக விழுந்தது.

இதையடுத்து பாதுகாப்பு கருதி மெயினருவி, பழைய குற்றால அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று காலையில் வெள்ளப்பெருக்கு கட்டுக்குள் வந்ததையடுத்து மெயினருவி, பழைய குற்றால அருவி ஆகியவற்றில் விதிக்கப்பட்டிருந்த தடை விலக்கிக் கொள்ளப்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகளும், ஐயப்ப பக்தர்களும் மகிழ்ச்சியுடன் குளித்தனர்.


Tags : Courtallam ,waterfalls , Allow,bathing , Courtallam,waterfalls
× RELATED சுருளி அருவியில் குறைந்த நீரில் குளித்து மகிழும் சுற்றுலா பயணிகள்