எதற்கும் லஞ்சம்; ஓட்டுக்கு பணம் இப்போது தேர்தலே ஏலம்: ஹரிபரந்தாமன், ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி

தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகள் வாக்காளர்களுக்கு ஓட்டுக்கு காசு கொடுக்கத்தான் செய்கின்றனர். நாட்டில் எந்த கட்சி ஆட்சியில் இருந்தாலும் சரி, அரசு செய்ய வேண்டிய எல்லா துறை சம்பந்தப்பட்ட பல வேலைகளுக்கும் பொதுமக்களிடம் லஞ்சம் வாங்கத்தான் செய்கின்றனர். அதை தடுக்க முடிக்கிறதா? இதுநாள் வரை தேர்தல்  ஆணையமே இதை தடுக்க முடியவில்லையே.  அது போன்று தான் இப்போது, ஓட்டுக்கு காசு கொடுப்பது போல, புதிய தேர்தல் கலாச்சாரமாக,  உள்ளாட்சி தேர்தலில் பதவிகளுக்கு ஏலம் விடுவது என்பதும் பரவி வருகிறது. இதை ஆளும் தரப்பே செய்வதால் அதிகாரிகளாலும், தேர்தல் ஆணையத்தாலும் தடுக்க முடியாததாகி விட்டது. ஒவ்வொரு முறையும் ஜனநாயக தேர்தல் நடக்கத்தான் செய்கிறது. ஆனால், ஒவ்வொரு முறையும் நூறு சதவீதம் ஜனநாயக முறையில் தான் நடக்கிறதா என்றால் கேள்விக்குறி தான். அவ்வப்போது இருக்கும் ஆளும் கட்சியின் கை ஓங்கி  தான் இருக்கும். தேர்தல் என்றாலே, மக்கள் தங்கள் பிரதிநிதிகளை தேர்வு செய்வதற்காக உருவாக்கப்பட்டது. இந்தியா ஒரு மகத்தான ஜனநாயக நாடு.  அதில் முழு அளவில் எல்லா வகையிலும் ஜனநாயகம் தழைக்கிறது  என்று உலக அளவில் நம்புகின்றனர். அதில் ஒவ்வொன்றாக நாம் சரிவது வேதனையானது.

  என்னை கேட்டால் நகர்ப்புறங்களில் பதவிகளுக்கு இது போன்று ஏலம் விடுவது என்பது நடக்கவே நடக்காது. நாம் பார்த்தவரை இதுவரை நகர்ப்புறங்களில் வார்டுகளுக்கு ஏதாவது ஏலம் நடந்ததா, இல்லையே. அதே நேரத்தில், பல கிராமங்களில் தான் ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கு ஏலம் நடக்கத்தான் செய்கிறது. இந்த ஏலம் நடப்பதற்கு குறிப்பிட்ட ஒரு நபரை காரணமாக சொல்ல முடியாது. இந்த ஏலத்தில் பங்கேற்கும் அனைவருக்கும் தான் இதில் ெபாறுப்பு உள்ளது.  ஒரு குறிப்பிட்ட குழு என்று இல்லாமல் அனைவரும் சேர்ந்து தான் இந்த ஏலத்தில் பங்கேற்கின்றனர். அதில், ஒரு குறிப்பிட்ட நபரை அந்த ஊர் மக்கள் தான் தேர்வு செய்கின்றனர். எல்லாவற்றிற்கும் விலை என்று ஆகி விட்டது தான் இதற்கு காரணம். இதை பற்றி பேசுவதில் எந்த விதத்தில் அர்த்தமும் இல்லை. சட்டம் காசு வாங்கி விட்டு ஓட்டு போட அனுமதிக்கவில்லை. அது போலத்தான் ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கு ஏலம் விடுவதை இந்த சட்டம் அனுமதிக்காது. ஆனால், அதையும் மீறி நடக்கத்தான் செய்கிறது.

பொதுவாக, நகர்ப்புறங்களில் இது போன்று ஏலம் நடக்காது. அதிகமாக கிராமப்புறங்களில் இது ேபான்று ஏலம் நடக்கிறது. இப்படி ஏலம் நடப்பது என்பது பெரும் குறையாகத்தான் உள்ளது. தேர்தலில் காசு வாங்கி ஓட்டு போட்டு வருகின்றனர். அது போன்று இப்போது ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கு ஏலம் நடக்கத்தான் செய்யும். இங்கு எல்லாவற்றிற்கும் விலை என்று ஆகி விட்டது. அலுவலக உதவியாளர் பதவிக்கு ரூ.50 ஆயிரத்தில் இருந்து ரூ.5 லட்சம் வரை இப்போது லஞ்சம் கேட்கின்றனர். அது போன்று ஒவ்வொரு வேலைக்கு கூட லட்சக்கணக்கில் பணம் கேட்கின்றனர். அந்த அளவுக்கு புரையோடி விட்டது. சட்டம் ஓட்டு போட்டு காசு வாங்குவதை எப்படி அனுமதிக்காதோ, அது போன்று தான் உள்ளாட்சி பதவிகளை ஏலம் விடுவதை அனுமதிக்காது. ஒவ்வொரு தேர்தலிலும் இப்படி ஊரக பதவிகளுக்கு ஏலம் நடக்கத் தான் செய்கிறது. தொடர்ந்து இப்படி ஏலம் விடுவது நடந்து கொண்டே தான் இருக்கிறது. அதை தடுக்க வேண்டிய கடமை அனைவருக்கும் தான் உள்ளது. முதலில் வாக்காளர்களும் சட்டத்தை மதிக்க வேண்டும். அவர்கள் ஓட்டுக்கு பணம் வாங்க கூடாது என்ற உறுதியான மனநிலையில் இருக்க வேண்டும். அலுவலக உதவியாளர் பதவிக்கு ₹50 ஆயிரத்தில் இருந்து ₹5 லட்சம் வரை இப்போது லஞ்சம் கேட்கின்றனர். அது போன்று ஒவ்வொரு வேலைக்கு கூட லட்சக்கணக்கில் பணம் கேட்கின்றனர். அந்த அளவுக்கு புரையோடி விட்டது.

Related Stories: