வடமாநில ரயில்கள் ரத்து: பயணிகள் கடும் அவதி

சென்னை: ‘குடியுரிமை சட்டத் திருத்த மசோதா’வை இரு அவைகளிலும் மத்திய அரசு தாக்கல் செய்தது. இந்தச் சட்டத் திருத்த மசோதாவால் தங்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்று வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்தோர் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் அசாம், மேற்கு வங்காளம் போன்ற மாநிலங்களில் குடியுரிமை மசோதாவை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்டு ரயில்கள், பேருந்துகளை தீவைத்து கொளுத்தினர். எனவே, அசம்பாவித சம்பவம் நடைபெறாமல் தடுக்கும் வகையில் தெற்கு ரயில்வே சார்பில் வடமாநிலத்திற்கு இயக்கப்படும் ரயில்கள் நேற்று முன்தினம் முதல் அனைத்தும் ரத்து செய்யப்பட்டன.

இதனால் வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் தங்கள் ஊர்களுக்கு செல்ல முன்பதிவு செய்து, சென்ட்ரல் ரயில் நிலையம் வந்த போது போராட்டம் காரணமாக அனைத்து ரயில்களும் ரத்து செய்யப்பட்டதாக ரயில்வே அதிகாரிகள் கூறியுள்ளனர். இனால் என்னசெய்வதென்று தெரியாமல் அவர்கள் தவித்து வருகின்றனர். மேலும் எப்போது ரயில் இயக்கப்படும் என்று கேட்டால் அதெல்லாம் எங்களுக்கு தெரியாது என்று அலட்சியமாக கூறுவதாக பயணிகள் குற்றம் சாட்டுகின்றனர். 

Related Stories: