ஊரக வேலை திட்டத்துக்கு நிதி ஒதுக்காததால் ஊதியம் கிடைக்காமல் பயனாளிகள் தவிப்பு: ராமதாஸ் குற்றச்சாட்டு

சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை:மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாத திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டதன் நோக்கமே கிராமப்புற மக்களை வறுமையில் இருந்து மீட்க வேண்டும் என்பதுதான்.  இந்த திட்டத்திற்கு மத்திய அரசு ஒதுக்கிய நிதி போதுமானதாக இல்லை என்பதுதான்.தமிழகத்தை பொறுத்தவரை இதுவரை ₹4450.44 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. அத்துடன் மாநில அரசின் பங்கு உள்ளிட்ட பல்வேறு வழிகளில் கிடைத்த நிதியையும் சேர்த்து இதுவரை மொத்தம் ₹4725.24 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது. அதில் ₹4684.23 கோடி செலவிடப்பட்டு விட்டது.

இதுதான் பயனாளிகளுக்கு குறித்த காலத்திற்குள் ஊதியம் வழங்கப்படாமைக்கு காரணம்.கடந்த நிதியாண்டில் இத்திட்டத்திற்காக தமிழகத்துக்கு ₹4951 கோடி ஒதுக்கப்பட்டது. நடப்பாண்டில் அதைவிட ₹1,000 கோடி கூடுதலாக ஒதுக்கீடு செய்தால் இத்திட்டம் குறித்த மக்களின் எதிர்பார்ப்புகளை முழுமையாக நிறைவேற்றிட முடியும். நடப்பாண்டில் இதுவரை ₹4450 கோடி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், கூடுதல் நிதி ஒதுக்கீட்டையும் சேர்த்து தமிழகத்திற்கு இன்னும் ₹1500 கோடி வழங்க மத்திய அரசு முன்வர வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: