டெல்லியில் குடியுரிமை சட்டத் திருத்தத்தை எதிர்த்து போராட்டம் நடத்திய ஜாமியா மிலியா பல்கலைக்கழக மாணவர்கள் கைது

டெல்லி: டெல்லியில் குடியுரிமை சட்டத் திருத்தத்தை எதிர்த்து போராட்டம் நடத்திய ஜாமியா மிலியா பல்கலைக்கழக மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். தெற்கு டெல்லியில் நடந்த மாணவர்கள் போராட்டத்தின் போது வன்முறை வெடித்து பேருந்து எரிக்கப்பட்டதை அடுத்து போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Advertising
Advertising

குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிராக டெல்லியில் நடந்த போராட்டத்தின் போது 3 பேருந்துகளுக்கு தீ வைக்கப்பட்டது. குடியுரிமை சட்டத் திருத்தத்தை எதிர்த்து ஜாமியா மிலியா பல்கலைக் கழக மாணவர்கள் நடத்திய போராட்டத்தில் வன்முறை வெடித்தது. மேலும் போராட்டத்தில் ஈடுபட்ட பல்கலைக்கழக மாணவர்கள் மீது கண்ணீர்ப்புகை குண்டு வீசி தடியடி நடத்தி போலீசார் விரட்டியடித்தனர். இந்த சம்பவத்தில் 2 தீயணைப்பு வீரர்கள் காயமடைந்தனர். டெல்லியில் போராட்டத்தியின்போது 3 பேருந்துகளுக்கு தீ வைத்தது தாங்கள் அல்ல என்று ஜாமியா பல்கலைக்கழக மாணவர்கள் மறுப்பு தெரிவித்திருந்தனர். இந்நிலையில் ஜாமியா மிலியா பல்கலைக்கழக மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

டெல்லியில் போராட்டக்காரர்கள் வன்முறையை கைவிட்டு அமைதிகாக்க டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வேண்டுகோள் விடுத்துள்ளார். யாரும் வன்முறையில் ஈடுபடக்கூடாது, எந்த வகையிலும் வன்முறையை ஏற்றுக்கொள்ள முடியாது என அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார். மேலும் டெல்லியில் இயல்புநிலையை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு துணைநிலை ஆளுநரைக் கேட்டுக் கொண்டதாக அரவிந்த் கெஜ்ரிவால் தகவல் அளித்துள்ளார்.

Related Stories: