குடியுரிமை திருத்த சட்டத்தை வைத்து காங்கிரசும், அதன் கூட்டணி கட்சிகளும் கலவரத்தை தூண்டுவதாக பிரதமர் மோடி குற்றச்சாட்டு

தும்கா: அசாம் உள்ளிட்ட மாநிலங்களில் நடக்கும் போராட்டத்துக்கு மவுனமாக ஆதரவு தெரிவிப்பதாக காங்கிரஸ் கட்சி மீது மோடி குற்றம் சாட்டியுள்ளார். குடியுரிமை சட்டத் திருத்தத்தின் மூலம் நாட்டை பாஜக அரசும், மோடியும் காப்பாற்றிவிட்டனர் என்ற மக்கள் நம்பிக்கை உறுதியாகி உள்ளது என ஜார்க்கண்ட மாநில சட்டமன்றத் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பிரதமர் மோடி கூறியுள்ளார்.

குடியுரிமை திருத்த சட்டம் 1000 விழுக்காடு சரியான முடிவுதான் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். குடியுரிமை திருத்த சட்டத்தை வைத்து காங்கிரசும், அதன் கூட்டணி கட்சிகளும் கலவரத்தை தூண்டுவதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார். ஜார்க்கண்ட் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து, தும்காவில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் நாடுகளில் இருந்து இந்தியா வந்து அகதிகளாக தங்கியிருந்தோருக்காக குடியுரிமை திருத்த சட்டத்தை நாடாளுமன்றம் நிறைவேற்றியிருக்கிறது என்றார். அந்நாடுகளில் வேதனைக்கு ஆளானோருக்கு மரியாதை அளிக்கவும், அவர்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தவும் குடியுரிமை திருத்த சட்டம் அவசியம் என்றும் தெரிவித்தார்.

காங்கிரஸ், திரிணாமூல் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு எதிராக போராட்டம் நடத்தமாறு பாஜக மாநிலத் தலைவர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், மேற்குவங்கம், பஞ்சாப் மாறும் கேரள மாநிலங்களின் பாஜக தலைவர்களுக்கு ஜே.பி.நட்டா கடிதம் எழுதியுள்ளார். குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிராக வதந்திகளை எதிர்க்கட்சிகள் பரப்புவதாக பாஜக செயல் தலைவர் ஜே.பி.நட்டா குற்றம் சாட்டியுள்ளார்.

Related Stories: