×

காரைக்குடி அருகே காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வந்த 6 வயது சிறுமி உயிரிழப்பு

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வந்த 6 வயது சிறுமி சக்தி உயிரிழந்துள்ளார். உரிய சிகிச்சை அளிக்கப்படாததால் தான் சிறுமி உயிரிழந்ததாகக் கூறி தனியார் மருத்துவமனையை முற்றுகையிட்டு உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சோமசுந்தரம் - சுபலட்சுமி தம்பதியின் மகள் சக்தி(6) காய்ச்சல் பாதிப்பால் அப்பல்லோ மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

கோவை அரசு மருத்துவமனையில் உள்ள குழந்தைகள் நல அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த மூன்று குழந்தைகள் ஒரே நாளில் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் இந்த உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த ஆண்டு பன்றிக் காய்ச்சல் மற்றும் டெங்கு காய்ச்சல் பாதிப்பினால் நூற்றுக்கணக்கானோர் பலியாகினர். இதையடுத்து காய்ச்சலால் பாதிக்கப்படுபவர்களுக்கு 24 மணி நேரமும் சிகிச்சை கொடுக்கும் வகையில் அரசு மருத்துவமனைகளில் சிறப்பு வார்டுகள் அமைக்கப்பட்டது. ஆனால் தமிழகத்தில், பருவமழையை தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களிலும் டெங்கு, மலேரியா போன்ற கொசுக்களால் பரவும் காய்ச்சல்கள் தற்போது வேகமாக பரவி வருகிறது.

இப்படி கோவை அரசு மருத்துவமனையில் 195 பேர் டெங்கு மற்றும் வைரஸ் காய்ச்சல் பாதிப்புடன் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 36 பேர் குழந்தைகள் என்ற தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் காய்ச்சல் பாதிப்பு உட்பட அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் பல்வேறு சிகிச்சைகள் பெற்றுவந்த மூன்று குழந்தைகள் நேற்று ஒரே நாளில் உயிரிழந்தது பெற்றோர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Tags : death ,Karaikudi Karaikudi , Karaikudi, child, death, fever
× RELATED காரைக்குடியில் ஒன்றிய அமைச்சர் அமித்ஷாவின் ரோடு ஷோ ரத்து!