பொருளாதார மந்தநிலை, வேலைவாய்ப்பின்மை உள்ளிட்ட பிரச்சனைகளை திசைதிருப்ப குடியுரிமை திருத்த சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது: ஸ்டாலின் குற்றச்சாட்டு

சென்னை: குடியுரிமை திருத்தச் சட்டத்தை ஏன் எதிர்க்க வேண்டும் என்பது குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் டிவிட்டரில் வீடியோ வெளியிட்டுள்ளார். குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக வடகிழக்கு மாநிலங்கள் மட்டுமின்றி நாடு முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை ஏன் எதிர்க்க வேண்டும் என்பது குறித்து ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார். குடியுரிமை திருத்தச் சட்டம் அரசியல் சாசனத்திற்கு எதிரானது, மக்களை பிளவுபடுத்தம் பிற்போக்கான சட்டம் என குற்றம் சாடினார். பொருளாதார மந்தநிலை, வேலைவாய்ப்பின்மை உள்ளிட்ட பிரச்சனைகளை திசைதிருப்ப குடியுரிமை திருத்த சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.

இஸ்லாமியர்கள் மற்றும் சிறுபான்மை இனத்தவரை புறக்கணிக்கும் வண்ணமாக குடியுரிமை திருத்த மசோதா உள்ளது. மதத்தின் பெயரால் நாட்டு மக்களை பிளவுபடுத்தும் சட்டமாக குடியுரிமை திருத்த மசோதாவை பாஜக மாற்றி உள்ளது. குறியுரிமை திருத்த மசோதா மூலம் தமிழர்களுக்கு பாஜகவும், அதிமுகவும் துரோகம் செய்துள்ளது. மீளாத்துயரில் இருக்கும் ஈழத் தமிழர்களின் வாழ்வை குடியுரிமைத் திருத்தச் சட்டம் பறிப்பதாக ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். அகதிகளாக வரும் மக்களின் அடிப்படை உரிமைகள் குறித்து அரசுக்கு எந்த கவலையும் கிடையாது. குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்தால் ஆட்சி பறிபோகும் என்பதால் அதிமுக அரசு பாஜகவுக்கு ஆதரவாக வாக்களித்து உள்ளது.

வெளிநாட்டு தலைவர்கள் இந்தியா வருவதற்கு அச்சப்படும் அளவுக்கு குடியுரிமை திருத்த மசோதாவுக்கு எதிரான போராட்டம் வலுத்துள்ளது. மதச்சார்பின்மையை குழிதோண்டி புதைக்கும் சட்டத்தை பாஜக அரசு பிடிவாதமாக நிறைவேற்றி இருக்கிறது. தமிழகத்துக்கும் தமிழகர்களுக்கும் ஆபத்து வரும் போது எல்லாம் அதற்கு எதிராக திமுக கொதித்து எழும். தமிழகத்தின் மீது நடத்தப்படும் எத்தகைய தாக்குதல்களையும் எதிர்த்து நிற்கும் தெம்பும், திராணியும் திமுகவுக்கு உண்டு எனவும் கூறியுள்ளார்.

Related Stories: