×

ஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை விவகாரம்: மத்திய குற்றப்பிரிவு போலீஸ் விசாரித்து வந்த நிலையில் தற்போது சிபிஐ-க்கு மாற்றம்

சென்னை: சென்னை ஐஐடியில் படித்து வந்த கேரள மாநிலத்தைச் சேர்ந்த மாணவி பாத்திமா லத்தீப் கடந்த 9ம் தேதி விடுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டார். வகுப்பில் முதலிடம் பிடிக்கும் மாணவியின் இந்த மரணம் ஒட்டுமொத்த மாணவ சமூகத்தையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. பெற்றோரிடம் இருந்து பிரிந்து இருந்த நிலையில் மன அழுத்தத்தில் பாத்திமா இருந்ததாக அவருடன் இருந்த சக மாணவிகள் தெரிவித்ததாக கூறி விடுதி காப்பாளர் லலிதா தேவி,  கொடுத்த தகவலின் அடிப்படையில், கோட்டூர்புரம் காவல்நிலையம் வழக்கு பதிவு செய்திருந்தது. தற்போது இந்த வழக்கு விசாரணையானது மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் காவல்துறையும் ஆதாரங்களை அழிக்க முயற்சிப்பதாக பாத்திமாவின் தந்தையும் பேட்டியளித்திருந்தார். இதுமட்டுமல்லாமல் கடந்த 2018ம் ஆண்டு முதல் இந்தாண்டு நவம்பர் வரை சென்னை ஐஐடியில் 5 மாணவர்கள் இதே போல் மர்மான முறையில் உயிரிழந்துள்ளனர். தொடர்ச்சியாக இத்தகைய மரணங்கள் நடந்து வருவதாலும், பாத்திமா மரணத்திலும் பல்வேறு சந்தேகங்கள் இருப்பதாலும் இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கோ அல்லது தனி விசாரணை அமைப்புகளுக்கோ மாற்றி உத்தரவிட கோரி தேசிய மாணவர்கள் கூட்டமைப்பின் தமிழக தலைவர் அஸ்வத்தமன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

மனுதாரர் போதிய ஆவணங்களுடன் மனுவை தாக்கல் செய்யவில்லை. எனவே இந்த வழக்கை தள்ளுபடி செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில் பாத்திமா தற்கொலை செய்த வழக்கு, சிபிஐ விசாரணைக்கு மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. சென்னை மத்திய குற்றப் பிரிவு விசாரித்து வந்த நிலையில் சி.பி.ஐ. வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.


Tags : Fatima ,Central Criminal Investigations IIT ,Central Bureau of Investigation , IIT student Fatima, Central Crime Division, CBI
× RELATED வாக்குப்பதிவு குறைந்த பகுதியில் அதிகாரிகள் விழிப்புணர்வு