×

சென்னையில் பெட்ரோல் விலை 11 காசுகள் குறைந்து ரூ.77.70-க்கு விற்பனை: வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி

சென்னை: சென்னையில் இன்று பெட்ரோல் விலை, லிட்டருக்கு ரூ.77.70 காசுகள், டீசல் விலை, லிட்டருக்கு ரூ.69.81 காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நாள்தோறும் நிர்ணயித்து விற்பனை செய்ய இந்தியாவில் உள்ள எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை, இறக்குமதி செலவு, அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு ஆகியவற்றுக்கு ஏற்ப பெட்ரோல் மற்றும் டீசல் விலையை இந்திய எண்ணெய் நிறுவனங்கள் தினமும் நிர்ணயம் செய்கின்றன.

கடந்த ஆண்டு அக்டோபரில் ஒரு லிட்டர் பெட்ரோல் 87ஐ தாண்டியது. தொடர் விலை உயர்வு காரணமாக பெட்ரோல், டீசல் மீதான உற்பத்தி வரியை மத்திய அரசு குறைத்தது. இதனைத் தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலையில் இறங்குமுகம் காணப்பட்டது. இந்நிலையில் சென்னையில் பெட்ரோல் லிட்டர் ஒன்றுக்கு ரூ.77.70க்கு விற்பனை செய்யப்படுகிறது. டீசல் ரூ.69.81க்கு விற்பனை செய்யப்படுகிறது. இது தொடர்பாக எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில்; சென்னையில் பெட்ரோல், நேற்றைய விலையில் இருந்து 11காசு குறைந்து ஒரு லிட்டர் ரூ.77.70ஆகவும், டீசல்,

நேற்றைய விலையில் இருந்து மாற்றமில்லாமல் லிட்டர் ரூ.69.81 ஆகவும் உள்ளது. இந்த விலை இன்று காலை முதல் அமலுக்கு வந்தது. 7-வது நாளாக தொடர்ந்து டீசல் விலையில் மாற்றம் இல்லாமல் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags : Chennai , Chennai, petrol prices, motorists
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...