×

அதிமுக 2ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு

சென்னை:  அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் 2ம் கட்ட வேட்பாளர் பட்டியலை நேற்று அறிவித்துள்ளனர். மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் ஆகிய பதவிகளுக்கான வேட்பாளர்கள் பெயர்கள் இதில் இடம் பெற்றுள்ளது. இதில், திருவள்ளூர் கிழக்கு-மேற்கு, திருவண்ணாமலை வடக்கு- தெற்கு, நாமக்கல், நீலகிரி திருச்சி மாநகர்-புறநகர், பெரம்பலூர், கரூர், தஞ்சாவூர் வடக்கு- தெற்கு, நாகப்பட்டினம், மதுரை புறநகர் மேற்கு, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி தெற்கு வேட்பாளர்கள் விவரம் இடம்பெற்றுள்ளது.


Tags : AIIMS ,Phase 2 , Release of candidate list, Phase 2 of AIIMS
× RELATED சுற்றுச்சூழல் அனுமதி பெறும் முன்பே...