×

கள்ளக்காதலியின் மகளை தன்னுடன் அனுப்ப மறுத்ததால் மூதாட்டி கழுத்தறுத்து ஆசிட்டை ஊற்றி கொலை

* தப்பி ஓட முயன்ற ரவுடியை மக்கள் அடித்தே கொன்றனர்
* நாமக்கல் அருகே நள்ளிரவில் பயங்கரம்

சேந்தமங்கலம்: நாமக்கல் அருகே, கள்ளக்காதலியின் மகளை தன்னுடன் அனுப்ப மறுத்ததால், மூதாட்டியின் கழுத்தை அறுத்தும் ஆசிட்டை ஊற்றியும் கொடூரமாக கொன்ற ரவுடி, தப்பி ஓட முயன்றபோது பொதுமக்கள் அடித்துக் கொன்றனர். நாமக்கல் மாவட்டம், புதுச்சத்திரம் அடுத்த குருசாமிபாளையம் தோப்புக்காடு பகுதியை சேர்ந்தவர் தனம் (65). இவரது மகன் ரவிக்குமார். இவருக்கு விஜயா(38) என்ற மனைவியும், வாசுகி, வசந்தி என்ற இரு மகள்களும் உள்ளனர். கடந்த 18 ஆண்டுகளுக்கு முன்பு, விபத்தில் ரவிக்குமார் இறந்தார். இதனையடுத்து, விஜயா மகள்களுடன் பள்ளிபாளையத்தில் தங்கி, அங்குள்ள பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். அப்போது, தர்மபுரி எம்ஜிஆர் காலனியை சேர்ந்த பிரபல ரவுடி சாமுவேல்(40) என்பவருடன் தொடர்பு ஏற்பட்டது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து, உல்லாசம் அனுபவித்து வந்தனர். இதையறிந்த அவரது மகள்கள் தாயை கண்டித்தனர். ஆனால், அதை கண்டுகொள்ளாத விஜயா, சாமுவேலுடன் நெருங்கி பழகி வந்தார்.

இதனால் ஆத்திரமடைந்த மூத்த மகள் வாசுகி, தான் காதலித்து வந்த வாலிபரை திருமணம் செய்து கொண்டு, வீட்டில் இருந்து வெளியேறினார். 2வது மகள் வசந்தி, குருசாமிபாளையத்தில் உள்ள பாட்டி தனம் வீட்டிற்கு சென்று விட்டார். அங்கு தங்கியிருந்து, ராசிபுரம் அரசு கலைக்கல்லூரியில் படித்து வருகிறார். மகள்கள் இருவரும் பிரிந்து சென்றதால், தனியாக இருந்த விஜயா, சாமுவேலுடன் தர்மபுரிக்கு குடியேறினார். அங்கு இருவரும் தனிக்குடித்தனம் நடத்தி வந்தனர். இந்நிலையில், வசந்தியை தங்களுடன் அழைத்துவந்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி பணம் சம்பாதிக்க சாமுவேல் திட்டமிட்டுள்ளார். இதனால் அடிக்கடி தனம் வீட்டுக்கு சென்று வசந்தியை தன்னுடன் அனுப்பும்படி கூறியுள்ளார். ஆனால் தனம் திட்டவட்டமாக மறுத்துவிட்டார். இதுபோல், அடிக்கடி இரவில் வந்து  சாமுவேல் தகராறு செய்ததால், பேத்தியின் பாதுகாப்பை கருதி, இரவில் அருகில் உள்ள உறவினர் வீட்டிற்கு, தனம் அனுப்பி வைத்து விடுவாராம்.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, வழக்கம் போல் வசந்தியை அருகில் உள்ள உறவினர் வீட்டிற்கு அனுப்பிவிட்டு, தனம் மட்டும் தனியாக தூங்கிக்கொண்டிருந்தார். நள்ளிரவில் அங்கு வந்த சாமுவேல், வசந்தியை தன்னுடன் அனுப்பி வைக்குமாறு கேட்டு தகராறு செய்துள்ளார். அதற்கு மருமகளே என்னுடன் இல்லை, எப்படி பேத்தியை உன்னுடன் அனுப்பி வைக்க முடியும் என்று கூறினார்.  இதில் ஆத்திரமடைந்த சாமுவேல் மாணவியை கடத்திச் சென்று விடுவேன் என்று மிரட்டினார். இதுதொடர்பாக அவர்களிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது வீட்டை உள்பக்கமாக பூட்டிக்கொண்டு கத்தியை எடுத்து, தனத்தின் கழுத்தை சாமுவேல் அறுத்துள்ளார். இதில் ரத்தவெள்ளத்தில் உயிருக்கு போராடிய தனத்தின் மீது, தான் கையோடு கொண்டு வந்திருந்த 5 லிட்டர் கேனில் இருந்த ஆசிட்டை ஊற்றினார். இதனால் வலி தாங்க முடியாமல் தனம் அலறி துடித்தார். சத்தம் கேட்டு, அக்கம்பக்கத்தினர் வீட்டின் முன்பு திரண்டனர். தனத்தின் அலறல் சத்தம் மட்டுமே கேட்டதால் சந்தேகம் அடைந்து கதவை தட்டினர். ஆனால், கதவு திறக்கப்படவில்லை.

தகவலின்படி புதுச்சத்திரம் போலீசார் வந்து, பொதுமக்கள் உதவியுடன் கதவை உடைத்தும், வீட்டின் மேற்கூரையை பிரித்தும் உள்ளே சென்றனர். அங்கு ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்த தனத்தின் அருகே, சாமுவேல் உட்கார்ந்திருந்தார். அவரை போலீசார் பிடிக்க முயன்ற போது, தான் வைத்திருந்த ஆசிட் கேனுடன் வெளி வாசலுக்கு ஓடி வந்த அவர், அங்கிருந்த பொதுமக்கள் மீது ஆசிட்டை ஊற்றியபடி, தப்பியோடினார். ஆசிட் பட்டதில் 10 பேருக்கு காயமேற்பட்டது. இதனால், ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள், சாமுவேல் மீது கற்களை வீசி தாக்கியும், கம்பு, கட்டை ஆகியவற்றை கொண்டு தாக்கியும் விரட்டி பிடிக்க முயன்றனர். அவர்களுக்கு பயந்து தலைதெறிக்க ஓடிய சாமுவேல், வழியில் இருந்த சிமென்ட் வாசல்படி ஒன்றில் கால் தவறி தடுக்கி கீழே விழுந்தார். இதில் தலையில் படுகாயமடைந்த அவர், ரத்த வெள்ளத்தில் மயங்கினார். அவரை போலீசார் மீட்டு, ஆம்புலன்ஸ் மூலம் ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், வழியிலேயே சாமுவேல் உயிரிழந்தார். இதுகுறித்து புதுச்சத்திரம் போலீசார் வழக்கு பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.  தகவலறிந்த நாமக்கல் எஸ்பி அருளரசு, அங்கு நேரில் வந்து விசாரணை நடத்தினார்.

40க்கும் மேற்பட்ட வழக்குகள்

பிரபல ரவுடியான சாமுவேல், கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையை சேர்ந்தவர். இவர்  மீது, தர்மபுரி டவுன் போலீஸ் ஸ்டேஷனில் மட்டும் 12 திருட்டு, கொள்ளை  வழக்குகள் உள்ளன. இதுதவிர, தர்மபுரி முழுவதும் 40 வழக்குகள் உள்ளன. ஆள் இல்லாத வீடுகளை நோட்டமிட்டு பூட்டை உடைத்து  திருடுவதில் கைதேர்ந்தவர்.

Tags : death ,Grandma ,pirate , Refused to send the daughter ,pirate,Grandma murdered , strangling the ass
× RELATED அடையாளம் தெரியாத மூதாட்டி உடல்