இறக்குமதி வரி உயர்வால் தங்கம் கடத்தல் அதிகரிப்பு

புதுடெல்லி: வரி உயர்வு காரணமாக தங்கம் கடத்தல் அதிகரித்து வருகிறது. நடப்பு ஆண்டில் கடத்தல் 40 சதவீதம் உயரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய அரசு கடந்த ஜூலையில் தங்கம் இறக்குமதி வரியை உயர்த்தியது. அதேபோல் சர்வதேச சந்தையில் தங்கம் விலை அதிகரித்தது. இதனால் தங்கம் கடத்தி வருவது அதிகரித்துள்ளது. உதாரணமாக, சென்னை விமான நிலையத்தில் ஒரே விமானத்தில் 30 பயணிகள் அதிகாரிகளிடம் சிக்கினர். அவர்களிடம் இருந்து 7.5 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

கடந்த செப்டம்பரில் தங்கம் விலை உச்சத்தை தொட்டதாலும், இறக்குமதி வரி உயர்வு, அமெரிக்கா - சீனா வர்த்தகப்ேபார் காரணமாக கடத்தல் அதிகரித்தது. நடப்பு ஆண்டில் தங்கம் கடத்தல் 30 முதல் 40 சதவீதம் அதிகரித்து, 140 டன்களாக உயரும் எனவும், அடுத்த ஆண்டில் கடத்தல் மேலும் அதிகரிக்கும் எனவும் அகில இந்திய நவரத்தினம் மற்றும் ஆபரண கவுன்சில் தெரிவித்துள்ளது.

Related Stories: