×

நிதியாண்டின் முதல் பாதியில் அன்னிய முதலீடு அதிகரிப்பு 2.47 லட்சம் கோடியானது

புதுடெல்லி: நாட்டில் பல ஆண்டுகளாக நீடித்த பொருளாதார மந்தநிலையில் இருந்து பொருளாரத்தை வளர்ச்சி பாதைக்கு திருப்ப மத்திய அரசு பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளை எடுத்தது. அதற்கு நல்ல பலன் கிடைக்கத் தொடங்கியுள்ளது. இந்த நிதியாண்டின் முதல் பாதியில் அன்னிய முதலீடு அதிகாித்துள்ளது. அதாவது ரூ.2.47 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. ஓர் ஆண்டிற்கு முன்பு இதே காலத்தில் அன்னிய முதலீடு ரூ.2.19 லட்சம் கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

பொருளாதார மந்தநிலையில் இருந்து மீட்க அரசு எடுத்த நடவடிக்கைகள் குறித்து நேற்று முன்தினம் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.  அப்போது  மத்திய அரசின் தலைமை பொருளாதார ஆலோசகர் கிருஷ்ணமூர்த்தி சுப்பிரமணியம் கூறியதாவது: அரசு எடுத்துள்ள நடவடிக்கைகளுக்கு நல்ல பலன் கிடைக்கத் தொடங்கியுள்ளது. இந்த நிதியாண்டின் முதல் பாதியில் அன்னிய முதலீடு வரத்து 35 பில்லியன் டாலராக (ரூ.2.47 லட்சம் கோடி) அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு இதே காலத்தில் அன்னிய முதலீடு வரத்து 31 பில்லியன் டாலராக (ரூ.2.19 லட்சம் கோடி) இருந்தது குறிப்பிடத்தக்கது.

Tags : half ,fiscal , Foreign investment growth, Rs 2.47 lakh crore
× RELATED தூங்குவதற்கு அரை மணி நேரத்துக்கு முன் செல்போனை ‘OFF’செய்யுங்க!