அமெரிக்காவில் மராத்தான் போட்டியின்போது பெண் நிருபரின் பின்னால் தட்டிய அமைச்சர் கைது

வாஷிங்டன் : மராத்தான் போட்டி குறித்து நேரலை நிகழ்ச்சியில் செய்தி அளித்துக் கொண்டிருந்த பெண் நிருபரின் பின்னால் தட்டிவிட்டுச் சென்ற, மாகாண அமைச்சரை போலீசார் கைது செய்தனர். அமெரிக்காவின் ஜார்ஜியாவில் சமீபத்தில் மராத்தான் ஓட்டப்பந்தய நிகழ்ச்சி நடைபெற்றது. இதை பல்வேறு செய்தி சேனல்கள் நேரலையாக ஒளிபரப்பின. இதேபோல் பிரபல தொலைக்காட்சி ஒன்றின் நிருபரான அலெக்ஸ் போஜார்ஜியன் என்ற பெண், போட்டியாளர்களின் பின்னணியில் செய்திகளை தொகுத்து வழங்கிக் கொண்டிருந்தார். ஓடிக்கொண்டிருந்த போட்டியாளர்களில் திடீரென ஒருவர் அலெக்ஸ் போஜார்ஜியனின் பின்புறத்தில் தட்டிவிட்டுச் சென்றார். இதனால் அவர் நேரலையிலேயே விக்கித்துப்போய் நின்றார்.

அலெக்ஸ் போஜார்ஜியன் தொடர்ந்து நேரலையை தொகுத்து வழங்கி கொண்டிருந்தார். இது சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இந்நிலையில், அலெக்ஸ் போஜார்ஜியனின் பின்னால் தட்டியவர், தாமஸ் கால்வே (43) என்று தெரியவந்தது. இவர் ஜார்ஜியா மாகாண இளைஞர் நலத்துறை அமைச்சர். திருமணமாகி ஒரு பெண் குழந்தையும் உள்ளது. பெண் நிருபரின் புகாரைத் தொடர்ந்து, தாமஸ் கால்வே நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டார். ஆனால், அமைச்சர் கூறுகையில், ‘‘நான் ஓடிக்கொண்டிருக்கும்போது, நிருபரை கவர்வதற்காக அவரது முதுகில்தான் தொட்டேன். ஆனால், ஓடிக்கொண்டே கவனமில்லாமல் அதை செய்ததால் கை தவறுதலாக பட்டுவிட்டது என்று நினைக்கிறேன். நான் தவறாக தொட்டிருந்தால், அந்த பெண் நிருபரிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்’’ என்று கூறியுள்ளார். தன்னுடைய தவறான நடவடிக்கையால், அவரது அமைச்சர் பதவிக்கு ஆபத்து வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: