×

பரிசாக வெங்காய தோடு தந்த நடிகர் அக்சய் குமார் : பூரித்து போனார் மனைவி டிவிங்கிள்

புதுடெல்லி: நடிகர் அக்சய் குமார் தனது மனைவி டிவிங்கிள் கண்ணாவுக்கு அரிய பரிசாக ஒரு ஜோடி வெங்காய தோடு கொடுத்த சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது. வெங்காயத்தின் விலை நாடு முழுவதும் வரலாறு காணாத உச்சத்தை அடைந்துள்ளது. எகிப்து போன்ற பாலைவன நாட்டில் இருந்து கூட வெங்காயத்தை இறக்குமதி செய்து விலையை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. மலிவு விலையில் வெங்காயம் கிடைத்தால் மக்கள் முண்டியடித்து சென்று வாங்குகின்றனர்.

இதைப் பற்றி எல்லாம் சமூக வலைதளத்தில் பல மீம்ஸ்கள் வந்து கொண்டிருக்கும் நிலையில், நடிகர் அக்சய் குமார் தனது மனைவி டிவிங்கிள் கண்ணாவுக்கு கொடுத்த அரிய பரிசு வைரலாகி உள்ளது. கபில் சர்மா இயக்கிய புதுப்பட புரமோசன் நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு வந்த நடிகர் அக்சய் குமார், அங்கிருந்து ஒரு ஜோடி வெங்காய தோடுகளை மனைவிக்கு பரிசாக தந்துள்ளார். அவற்றை டிவிங்கிள் கண்ணா டிவிட்டரில் பதிவிட பயங்கர வைரலானது. அதோடு, டிவிங்கிள் தனது டிவிட்டில், ‘‘சில சமயங்களில் சிறிய, வேடிக்கையான விஷயங்கள் உங்கள் மனதை தொடும்’’ என கூறி உள்ளார்.

Tags : Akshay Kumar ,Twinkle Khanna , Akshay Kumar presents ,wife Twinkle Khanna ,onion earrings
× RELATED Eid Movies: ஏப்ரல் 11ம் தேதி வெளியாகும் படே மியான் சோட் மியான் திரைப்படம்!