வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை?

சியோல்: மூடப்படுவதாக அறிவிக்கப்பட்ட சோகா ராக்கெட்  ஏவுதளத்தில் இருந்து வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை செய்ததாக கூறப்படுகிறது. அமெரிக்க  அதிபர் டிரம்புடன் அணு ஆயுத ஒழிப்பு குறித்து இருமுறை பேச்சுவார்த்தை  நடத்திய பின்னரும், அதில் முன்னேற்றம் ஏற்படவில்லை. இதையடுத்து, தன் மீதான  பொருளாதார தடைகளை  விலக்குவது உள்ளிட்ட நிபந்தனைகளுடன் கூடிய புதிய ஒப்பந்தத்தை இந்தாண்டு  இறுதிக்குள் தயார் செய்த பிறகு மீண்டும் பேச்சுவார்த்தைக்கு வருமாறு  அமெரிக்காவிடம் வட கொரியா தெரிவித்தது. இந்நிலையில், அமெரிக்காவிடம் ஏற்கனவே  மூடுவதாக உறுதி அளிக்கப்பட்ட சோகா ராக்கெட் தளத்தில் வட கொரியா நேற்று  மீண்டும் முக்கிய சோதனை நடத்தி உள்ளது. இது ராக்கெட் அல்லது ஏவுகணை  சோதனையாக இருக்கலாம் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இது, அணு  ஆயுதம் தொடர்பாக அமெரிக்கா, தென் கொரியாவுடன் நடத்தப்படும்  பேச்சுவார்த்தையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை என்பதை காட்டுவதாகவே  அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். அதே நேரம், புதிய ஒப்பந்தத்துக்கான  காலக்கெடு நெருங்குவதால் அமெரிக்காவை எச்சரிக்கும் வகையிலும் இந்த சோதனை  நடத்தப்பட்டு இருக்கலாம் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

Related Stories: