குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிராக காங். வன்முறையை தூண்டுகிறது : அமித்ஷா குற்றச்சாட்டு

கிரிதி: குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிராக காங்கிரஸ் வன்முறையை தூண்டி விடுவதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா குற்றம் சாட்டியுள்ளார். ஜார்க்கண்ட் மாநில சட்டப்பேரவைக்கு 5 கட்ட தேர்தல் அறிவிக்கப்பட்டு, இதுவரை 3 கட்ட தேர்தல் முடிந்து விட்டது. வரும் 16, 20 தேதிகளில் 4 மற்றும் 5ம் கட்டத் தேர்தல் நடக்க இருக்கிறது. இதற்கான பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள பாஜ தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித்ஷா, கிர்தி மாவட்டத்தில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் நேற்று பேசியதாவது:

குடியுரிமை சட்டத் திருத்த மசோதா மக்களவை, மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டு சட்டமாக்கப்பட்டு உள்ளது. இது, காங்கிரசுக்கு வயிற்றெரிச்சலை ஏற்படுத்தி உள்ளது. அதனால், இந்த சட்டத்துக்கு எதிராக அது வன்முறையை தூண்டி வருகிறது. அசாம் உள்ளிட்ட வட கிழக்கு மாநில மக்களுக்கு ஒன்றை தெரியப்படுத்தி கொள்ள விரும்புகிறேன். உங்களின் கலாசாரம், மொழி, சமூக அடையாளம், அரசியல் உரிமைகள் ஆகியவற்றுக்கு பிரதமர் மோடியின் அரசு பாதுகாப்பு அளிக்கும். இதில் எந்த மாற்றமும் கிடையாது. இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories: