கமிஷனர் அலுவலகம் முன்பு குழந்தைகளுடன் தாய் தீக்குளிக்க முயற்சி : போலீசார் விசாரணை

சென்னை: சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகம் முன்பு இரண்டு குழந் தைகளுடன் தாய் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. மாதவரம் பொன்னியம்மன் மேடு 3வது தெருவை சேர்ந்த சரஸ்வதி (32). இவரது வீட்டின் முன்பு பொது வழியை மறைத்து மாதவரத்தை சேர்ந்த அகஸ்டின் (39) என்பவர் வீடு கட்டியதாக கூறப்படுகிறது. இது சம்மந்தமாக ஏற்பட்ட தகராறில், கடந்த 19ம் தேதி சரஸ்வதியின் கணவர் ஷேக் முகம்மது, அகஸ்டினை அடித்ததாக கூறப்படுகிறது. இதனால், மாதவரம் போலீசார் ஷேக் முகம்மதுவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

ஆனால், அகஸ்டின் மீது சரஸ்வதி அளித்த புகார் மீது போலீசார் எந்த நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால், விரக்தியடைந்த சரஸ்வதி, நேற்று தனது 2 குழந்தைகளுடன் வேப்பேரியில் உள்ள கமிஷனர் அலுவலகம் முன்பு வந்து, பையில் கொண்டு வந்த டீசலை எடுத்து குழந்தைகள் மற்றும் தன் மீது ஊற்றி தீக்குளிக்க முயற்சித்தார். பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவரை தடுத்து நிறுத்தனர். தகவலறிந்து வந்த வேப்பேரி போலீசார், அவரை வேப்பேரியில் உள்ள மகளிர் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Commissioner , Commissioner's Office, Trying to Fire Mother With Children, Police Investigation
× RELATED சென்னை மெரினாவில் கடத்தப்பட்ட ஆண்...