காஷ்மீரில் வீட்டில் அடைக்கப்பட்டுள்ள பரூக் அப்துல்லா காவல் மேலும் 3 மாதம் நீட்டிப்பு

ஸ்ரீநகர்: காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை கடந்த ஆகஸ்ட் 5ம் தேதி மத்திய அரசு ரத்து செய்தது. அதைத் தொடர்ந்து, முன்னாள் முதல்வர்களான தேசிய மாநாட்டு கட்சி தலைவர்கள் பரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா மற்றும் மக்கள் ஜனநாயக கட்சி (பிடிபி) தலைவர் மெகபூபா முப்தி ஆகியோர் பொது அமைதி சட்டத்தின் கீழ் வீட்டுக் காவலில் அடைக்கப்பட்டனர்.

இத்தகவல் கூட கடந்த செப்டம்பர் 17ம் தேதிதான் தெரியவந்தது.  மக்களவை எம்பி பரூக் அப்துல்லா சட்டவிரோத காவலில் அடைக்கப்பட்டுள்ளதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கின் போதுதான், இத்தகவலை அரசு வெளியிட்டது. இந்நிலையில், பரூக் அப்துல்லாவின் வீட்டுக்காவல் மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டு உள்ளதாக ஸ்ரீநகர் சப்-ஜெயில் அதிகாரி தெரிவித்துள்ளார். பொது அமைதி சட்டத்தின் கீழ் ஒரு நபரை விசாரணையின்றி 3 மாதம் முதல் 6 மாதம் வரை சிறையில் அடைக்க முடியும்.

Related Stories: