லோக் அதாலத்தில் 2.5 லட்சம் மனுக்கள்மீது விசாரணை 65,199 வழக்குகளில் தீர்வு 396 கோடி பைசல்

சென்னை : தமிழகம் முழுவதும் நேற்று நடந்த லோக் அதாலத்தில் 65, 199 மனுக்களில் தீர்வு காணப்பட்டு ₹395 கோடியே 78 லட்சத்து இரண்டாயிரத்து 233 வழக்குகள் பைசல் செய்யப்பட்டது. தேசிய சட்டபணிகள் ஆணை குழுவின் உத்தரவின் படி ஒவ்வொரு வருடமும் மார்ச், ஜூலை, செப்டம்பர், டிசம்பர் மாதங்களில் 2ம் சனிக்கிழமையில் நீண்ட நாட்களாக நீதிமன்றங்களில் நிலுவையில் கிடக்கும் வழக்குகளை முடித்து வைப்பதற்காக மக்கள் நீதிமன்றம் எனப்படும் லோக் அதாலத் நடத்தப்படுகிறது.அதன்படி இந்த வருடம் தமிழகம் முழுவதும் நேற்று லோக் அதாலத் நடைபெற்றது. அதில் வழக்கு தொடராமல் சட்டபணிகள் ஆணை குழுவிடம் மனு கொடுத்துள்ள தொழிலாளர்கள் தொடர்பான வழக்குகள், மின் கட்டணம், தண்ணீர் கட்டணம் தொடர்பான வழக்குகள், பராமரிப்பு தொடர்பான வழக்குகள் என பல்வேறு வழக்குகள் விசாரிக்கப்பட்டன.

இதேபோல் நீதிமன்றங்களில் நிலுவையில் இருக்கும், நில அபகரிப்பு, வருவாய்த்துறை, பணம் மீட்பு, விவாகரத்தை தவிர்த்து கணவன்- மனைவி இடையிலான மற்ற வழக்குகள் என பல்வேறு வழக்குகள் விசாரிக்கப்பட்டன. இதற்காக, சென்னை உயர் நீதிமன்றத்தில் 5 அமர்வுகளும், மதுரை கிளையில் 6 அமர்வுகளும், மாநில சட்டபணிகள் ஆணை குழுவில் 12 அமர்வுகளும், அனைத்து மாவட்ட சட்ட பணிகள் ஆணை குழுவில் 479 அமர்வுகளும் என மொத்தம் தமிழகம் முழுவதும் 502 அமர்வுகள் அமைக்கப்பட்டன. இதில், நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் 1 லட்சத்து 66 ஆயிரத்து 735 வழக்குகள், நீதிமன்றத்தில் இன்னும் தாக்கல் செய்யாமல் மனு கொடுத்துள்ள 69 ஆயிரத்து 510 வழக்குகளும் விசாரிக்கப்பட்டது.

மொத்தம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட சுமார் 2.5லட்சம் வழக்குகளில் 65,199 வழக்குகளில் தீர்வு காணப்பட்டு ₹395 கோடியோ 78 லட்சத்து இரண்டாயிரத்து 233  பைசல் செய்யப்பட்டது.

Related Stories: