உள்ளாட்சி தேர்தல் குறித்து ஆலோசனை மு.க.ஸ்டாலினுடன் வைகோ சந்திப்பு

சென்னை: உள்ளாட்சி தேர்தலில் எவ்வளவு குழப்பங்களை செய்ய முடியுமோ, அவ்வளவு குழப்பங்களையும் தமிழக அரசு செய்துள்ளது என்று வைகோ குற்றம்சாட்டியுள்ளார். உள்ளாட்சி தேர்தல் குறித்து, திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நேற்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு சுமார் 30 நிமிடங்களுக்கு மேல் நீடித்தது. பின்னர், வைகோ நிருபர்களிடம் கூறியதாவது:

உள்ளாட்சி தேர்தலில் எவ்வளவு குழப்பங்களை செய்ய முடியுமோ, அவ்வளவு குழப்பங்களையும் தமிழக அரசு செய்துள்ளது. ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறவிருக்கும் மாவட்டங்களில் தேர்தல் முறையாக நடக்குமா என்றால், 2011 மக்கள் தொகை அடிப்படையில் தேர்தல் நடத்தவில்லை.

இதுவே ஒரு ஏமாற்று மோசடி. எனவேதான் திமுக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுக்கும் முடிவுக்கு வந்துள்ளது. உள்ளாட்சி தேர்தல் குறித்த செய்திகளை பரிமாறி கொள்வதற்காக திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்தேன். வடகிழக்கு மாநிலங்களில் தீப்பற்றி எரிகின்றன. டெல்லியிலும் கொந்தளிப்பு ஏற்பட்டு இருக்கிறது. இஸ்லாமியர்கள் என்றாலே பாவச்செயல் என்பதை போல, அவர்களுக்கு எதிராக ஒவ்வொன்றாக நிறைவேற்றிக்கொண்டிருக்கிறார்கள். காஷ்மீர் தனி அந்தஸ்து நீக்குவது, இப்போது நிறைவேற்றியுள்ள குடியுரிமை சட்டம் அநீதியானது. எனவே தான் குடியுரிமை சட்டத்தை வங்காள விரிகுடாவில் தூக்கி வீசப்பட வேண்டும் என்று நான் நாடாளுமன்றத்தில் தெரிவித்தேன்.

Related Stories: