திமுக ஒதுக்கும் இடங்களை மதிமுக ஏற்கும் : வைகோ பேட்டி

சென்னை: தமிழகத்தில் நடக்க இருக்கும் உள்ளாட்சி  தேர்தலில் திமுக  ஒதுக்கும் இடங்களில் மதிமுக போட்டியிட்டு வெற்றி பெறும் என வைகோ கூறினார். சென்னை விமான நிலையத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நிருபர்களுக்கு அளித்த பேட்டி: சுதந்திர இந்தியாவில் அண்மை காலமாக அபாயகரமான முடிவுகளை மத்தியில் உள்ள பாஜ அரசு எடுத்து வருகிறது. காஷ்மீர் மக்களுக்கு தந்த வாக்குறுதிகளை காற்றில் பறக்கவிட்டு 370 அரசியல் அமைப்பு சட்டப்பிரிவை நீக்கியதால் காஷ்மீர் பற்றி எரிகிறது. எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போல் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளில் இருந்து எந்த மதத்தவரும் இங்கு வந்து குடியுரிமை பெறலாம். ஆனால் இஸ்லாமியர்களுக்கு இது பொருந்தாது என மத்திய அரசு கூறியுள்ளது. இது மகாத்மா காந்தியை மீண்டும் சுட்டுக்கொன்றதற்கு சமமாகும்.

இலங்கையில் இனப்படுகொலை செய்த கோத்தபய ராஜபக்சேவிடம் இவர்கள் கரம் பிடித்துக்கொண்டிருக்கிறார்கள். இது வரும் காலங்களில் அபாயகரமான விளைவுகளை ஏற்படுத்தும். கொலைகாரன் கோத்தபய ராஜபக்சேவுடன் விருந்து சாப்பிட்டு விட்டு வருவது தான் நம் நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சரின் கடமையாக உள்ளது.   தமிழகத்தில் நடக்க இருக்கும் உள்ளாட்சி தேர்தலை பொருத்தமட்டில் திமுக கூட்டணியில் இருக்கும் எங்களுக்கு திமுக ஒதுக்கும் இடங்களில் மதிமுக போட்டியிட்டு வெற்றி பெறும். இவ்வாறு அவர் கூறினார்.   

Related Stories: