14 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு: திமுக தலைமை கழகம் அறிவிப்பு

சென்னை : திமுக தலைமை கழகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை : டிசம்பர் 27 மற்றும் 30 ஆகிய நாட்களில் நடைபெற உள்ள உள்ளாட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.  தற்போது வரை, திருவண்ணாமலை வடக்கு, திருவண்ணாமலை தெற்கு, திருச்சி வடக்கு, திருச்சி தெற்கு, கரூர், சேலம் மத்திய, சேலம் மேற்கு, கோவை தெற்கு, நீலகிரி, மதுரை வடக்கு, மதுரை தெற்கு, தூத்துக்குடி வடக்கு, தூத்துக்குடி தெற்கு, கன்னியாகுமரி கிழக்கு ஆகிய கழக மாவட்டங்களில் கூட்டணிக் கட்சியினருடன் சேர்ந்து சுமுக முடிவெடுக்கப்பட்டு, தலைமைக் கழகத்தின் ஒப்புதலோடு, அந்தந்த மாவட்டக் கழகங்களின் சார்பில் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. மற்ற திமுக மாவட்டக் கழகங்கள் சார்பில் தோழமைக் கட்சிகளிடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. விரைந்து அந்தந்த மாவட்டக் கழகங்கள் சார்பில் பட்டியல் வெளியிடப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: