சூடான் முன்னாள் அதிபர் ஒமர் அல் பஷிருக்கு ஊழல் வழக்கில் 2 ஆண்டுகள் தண்டனை: அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவு

கர்ட்டோம்: ஊழல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட சூடான் முன்னாள் அதிபர் முஹம்மது பஷீருக்கு 2 ஆண்டுகள் தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்று சூடான். அங்கு கடந்த 1993-ம் ஆண்டு முதல் அதிபர் பதவி வகித்து வந்தவர், உமர் அல் பஷீர் (வயது 75). இவர் உள்நாட்டுப்போரின்போது, போர்க்குற்றம் செய்ததாக சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு, அவருக்கு எதிராக சர்வதேச பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டது. இந்நிலையில் ஆட்சிக்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்திவந்தனர். இதற்கிடையில் அங்கு விலைவாசி உயர்வு உச்சத்தை எட்டியதால் பெரும் அவதிக்குள்ளான மக்கள் அதிபரை பதவி விலக வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சூடான் நாட்டில் ஏற்பட்ட ராணுவப் புரட்சியை அடுத்து 30 ஆண்டுக்காலமாக நீடித்த அரசு தூக்கியெறியப்பட்டு கடந்த ஏப்ரல் 11-ம் தேதி ராணுவ ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து அதிபர் ஓமர் அல் பஷீர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில், சிறையில் அடைக்கப்பட்டு உள்ள முன்னாள் அதிபர் உமர் அல் பஷீரின் வீட்டில் கடந்த ஏப். 21-ம் தேதி ராணுவ அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையின் போது ஒமர் அல் பஷிரின் வீட்டில் இருந்து கோடிக்கணக்கில் அமெரிக்க டாலர்கள் உள்ளிட்ட வெளிநாட்டு கரன்சிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

அதன்படி 5 பில்லியன் சூடான் பவுண்டு, 3 லட்சத்து 51 அமெரிக்க டாலர் மற்றும் 6 மில்லியன் யூரோ என ஒட்டுமொத்தமாக இந்திய மதிப்பில் சுமார் ரூ.902 கோடியே 7 லட்சம் சிக்கியது. சுமார் ஒருமாத கால விசாரணைக்கு பின்னர் அவர் கர்ட்டோம் நகரில் உள்ள கோபெர் சிறையில் அடைக்கப்பட்டார். ஓமர் அல் பஷீர் தனது அதிபர் பதவியை தவறாக பயன்படுத்தி ஏராளமான வெளிநாட்டு பணத்தை முறைகேடான வகையில் பதுக்கி வைத்திருந்ததாக அந்நாட்டு நீதிமன்றத்தில் கடந்த ஆகஸ்டில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அவரை ஜாமீனில் விடுவிக்க கோரிய மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது.

இந்நிலையில் சட்டவிரோத பணப்பரிமாற்றம், ஊழல் உள்ளிட்ட பிரிவுகளில் அவர் மீது வழக்கு நடத்தப்பட்டு தண்டனை அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது; ஓமர் அல் பஷீருக்கு இரண்டாண்டுகள் தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சூடான் நாட்டு சட்டங்களின்படி, 70 வயதை கடந்த குற்றவாளிகளை சிறைகளில் அடைப்பதில்லை என்பதால் தற்போது 72 வயதாகும் ஓமர் அல் பஷீர், தண்டனைக்காலம் முடியும்வரை சீர்திருத்த மையத்தில் அடைக்கப்படுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: