×

அசாம் உள்பட வடகிழக்கு மாநிலங்களின் கலாச்சாரம், சமூக அடையாளம், மொழி, அரசியல் உரிமைகளை நரேந்திர மோடி தலைமையிலான அரசு பாதுகாக்கும்: அமித்ஷா உறுதி

கிரிடிக்: ஜார்க்கண்ட் மாநிலத்தில் முதலமைச்சர் ரகுபர் தாஸ் பாஜக  தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த ஆட்சி வருகின்ற ஜனவரி 5 ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. இதனையடுத்து, 81 தொகுதிகளை கொண்ட ஜார்க்கண்ட் சட்டப்பேரவைக்கு நவம்பர் 30-ம் தேதி தொடங்கி 5 கட்டங்களாக  இந்த தேர்தல் நடைபெறும் என இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா அறிவித்தார். டிசம்பர் 23ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்றும் தெரிவித்தார். இந்நிலையில், முதல்கட்டமாக 13 தொகுதிகளுக்கும், 2-வது கட்டமாக 20 தொகுதிகளுக்கும், 3-ம் கட்டமாக 17 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெற்று முடிவடைந்தது.

இதனிடையே 4வது கட்ட தேர்தலுக்காக காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளை முக்கிய தலைவர்கள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் ஜார்க்கண்ட் மாநிலத்தின் கிரிடிக் மாவட்டத்தில் பாஜக கட்சியின் தலைவரும் மத்திய உள்துறை அமைச்சருமான அமித்ஷா இன்று தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர்; நாட்டின் அணிகலனாக காஷ்மீர் உருவெடுத்துள்ளது. சிறப்பு அந்தஸ்த்து வழங்க வகை செய்யும் 370, 35 ஏ ஆகிய சட்டப்பிரிவுகளை நீக்கியதன் மூலம் பிரதமர் மோடி காஷ்மீரில் மூவர்ணக் கொடியை பறக்க விட்டுள்ளார் என கூறினார்.

மேலும் பேசிய அவர்; நாங்கள் திருத்தியமைக்கப்பட்ட குரியுரிமை சட்டத்தை கொண்டுவந்துள்ளோம். ஆனால், இது காங்கிரஸ் கட்சிக்கு வயிற்றெரிச்சலை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அவர்கள் வன்முறையை தூண்டி விடுகின்றனர். அசாம் உள்பட வடகிழக்கு மாநிலங்களின் கலாச்சாரம், சமூக அடையாளம், மொழி, அரசியல் உரிமைகளை நரேந்திர மோடி தலைமையிலான அரசு பாதுகாக்கும் என்பதை நான் உறுதியளிக்கிறேன் என கூறியுள்ளார்.


Tags : government ,Amit Shah ,Narendra Modi ,states ,Assam , Assam, Culture, Social Identity, Narendra Modi, Amit Shah
× RELATED பிரதமர் நரேந்திர மோடி குமரி வருகையை ஒட்டி நாளை போக்குவரத்து மாற்றம்..!!