மோடி அரசு பதவியேற்ற ஆறே மாதங்களில் பொருளாதாரத்தை சீரழித்து விட்டது: பொதுக்கூட்டத்தில் ப.சிதம்பரம் பேச்சு

டெல்லி: இந்தியாவில் நிலவும் பொருளாதார மந்தநிலைக்கு பா.ஜனதா அரசின் தவறான கொள்கைகளே காரணம் என்று காங்கிரஸ் தலைவர்கள் குற்றம்சாடி வருகின்றனர். பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள சரிவு காரணமாக தொழில் துறையில் உற்பத்திகள் குறைந்து வேலைவாய்ப்புகள் பறிபோய் இருப்பதாகவும் காங்கிரஸ் கூறி வருகிறது. இந்நிலையில் குடியுரிமை சட்டதிருத்த மசோதா, காஷ்மீரில் 370-வது சட்டப்பிரிவு நீக்கம், விவசாயிகள் பிரச்சினை, வேலைவாய்ப்பு பிரச்சினை போன்றவற்றை கண்டித்து “இந்தியாவை காப்பாற்றுங்கள்” என்ற தலைப்பில் டெல்லியில் காங்கிரஸ் சார்பில் மாபெரும் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்று வருகிறது.

டெல்லி ராம்லீலா மைதானத்தில் நடைபெற்று வரும் பொதுக்கூட்டத்தில் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி மற்றும் ப.சிதம்பரம், உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். டெல்லி, உத்திரப்பிரதேசம், ஹரியானா, உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான காங்கிரஸ் தொண்டர்களும் கலந்து கொண்டுள்ளனர்.

ப.சிதம்பரம் பேச்சு;

பொதுக்கூட்டத்தில் பேசிய முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம்; மோடி அரசு ஆறு மாதங்களில்நாட்டை சீரழித்து விட்டதாக கூறினார். வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்து விட்டது. இந்திய பொருளாதாரம் மூழ்கி கொண்டிருக்கிறது. ஒவ்வொரு நாளும் பொருளாதாரம் பாதாளத்தை நோக்கி செல்கிறது. தினந்தோறும் கெட்ட செய்திகள் மட்டுமே வெளியாகி கொண்டிருக்கிறது. நாளையும் செய்தியை மட்டுமே இவர்களால் கொடுக்க முடியும். மோடி அரசு பதவியேற்ற ஆறே மாதங்களில் பொருளாதாரத்தை சீரழித்து விட்டனர்.

பிரியங்கா காந்தி பேச்சு;

இதனை தொடர்ந்து பொதுக்கூட்டத்தில் பேசிய பிரியங்கா காந்தி; நாட்டை நேசிக்கும் ஒவ்வொரு குடிமகனும் மோடி அரசை எதிரித்து குரல் கொடுக்க வேண்டும் என கூறினார். மக்கள் அமைதியாக இருந்தால் நாட்டை பின்னோக்கி கொண்டு செல்வதுடன், அரசியல் அமைப்பு சட்டத்தையும் இந்த அரசு அழித்துவிடும் என அவர் குற்றம் சாடினார்.

Related Stories: