விழுப்புரத்தில் சட்டவிரோத 3 நம்பர் லாட்டரி விற்பனைக்கு உடந்தையாக இருந்த 3 காவலர்களை ஆயுதப்படைக்கு மாற்றி விழுப்புரம் எஸ்.பி. உத்தரவு

விழுப்புரம்: விழுப்புரத்தில் சட்டவிரோத 3 நம்பர் லாட்டரி விற்பனைக்கு உடந்தையாக இருந்த 3 காவலர்கள் ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். செஞ்சி காவல் நிலையத்தை சேர்ந்த செல்வம், விழுப்புரம் நகர காவல்நிலைய பெண் காவலர் விஜயா, எழிலரசி ஆகிய 3 காவலர்கள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். விழுப்புரத்தில் 3 நம்பர் லாட்டரியால் பாதிக்கப்பட்ட நகை  தொழிலாளி தனது மனைவி, 3 மகள்களுக்கு பாலில் சயனைடு கலந்து கொடுத்து  கொலை செய்து வாட்ஸ்-அப்பில் வெளியிட்டுவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து தாலுகா போலீசார் வழக்கு பதிந்து விசாரணை  நடத்தினர். 5 பேர் தற்கொலை சம்பவத்தையடுத்து, லாட்டரி ஒழிப்பு பணியில் போலீசார் ஈடுபட்டனர். இதன்படி, விழுப்புரம்  நகரில் 3 நம்பர் லாட்டரி விற்ற இடைத்தரகர்கள் லோகு, ஜேம்ஸ், அகமதுஅலி, மூர்த்தி, முபாரக்அலி, கோவிந்த்,  நாசர்தீனு, பழனியாண்டி, சரவணன், அப்துல்லா, ராஜா, பிரகாஷ், மனோபாண்டியன்  மற்றும் ஒரு அதிமுக பிரமுகர் உள்ளிட்ட 15 பேரை கைது செய்தனர். பின்னர், கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில் விழுப்புரத்தில் சட்டவிரோத 3 நம்பர் லாட்டரி விற்பனைக்கு உடந்தையாக இருந்த 3 காவலர்கள்

மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். செஞ்சி காவல் நிலையத்தை சேர்ந்த செல்வம், விழுப்புரம் நகர காவல்நிலைய பெண் காவலர் விஜயா, எழிலரசி ஆகிய 3 காவலர்களை பணியிடமாற்றம் செய்து விழுப்புரம் எஸ்.பி. உத்தரவிட்டுள்ளார்.

Related Stories: