உள்ளாட்சி தேர்தலில் திமுக சார்பாக போட்டியிடும் 14 மாவட்டங்களுக்கான வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு : திமுக தலைமை தகவல்

சென்னை : உள்ளாட்சி தேர்தலில் திமுக சார்பாக போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடப்பட்டது. திமுக கட்சி ரீதியிலான 14 மாவட்டங்களுக்கான பட்டியல் வெளியிடப்பட்டுள்ளதாக திமுக தலைமை அறிவித்துள்ளது. மேலும் மற்ற மாவட்டங்களில் கூட்டணி கட்சிகளுடன் பேச்சு வார்த்தை முடிந்ததும் பட்டியல் வெளியாகும் என்றும் திமுக செய்தி வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் வருகிற டிசம்பர் 27 மற்றும் 30 ஆகிய நாட்களில் நடைபெற உள்ள உள்ளாட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

தி.மு.க. தலைமையிலான கூட்டணிக் கட்சிகள் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான கலந்தாலோசனை அந்தந்த திராவிட முன்னேற்ற மாவட்டக் கழகங்கள் சார்பில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் திமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தற்போது வரை, தி.மலை வடக்கு,

திருவண்ணாமலை தெற்கு,திருச்சி வடக்கு,திருச்சி தெற்கு,கரூர், சேலம் மத்திய,சேலம் மேற்கு, கோவை தெற்கு,நீலகிரி, மதுரை வடக்கு,மதுரை தெற்கு,

தூத்துக்குடி வடக்கு,தூத்துக்குடி தெற்கு,கன்னியாகுமரி கிழக்கு ஆகிய கழக மாவட்டங்களில் கூட்டணிக் கட்சியினருடன் சேர்ந்து சுமூக முடிவெடுக்கப்பட்டு, தலைமைக் கழகத்தின் ஒப்புதலோடு, அந்தந்த மாவட்டக் கழகங்களின் சார்பில் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.மற்ற திராவிட முன்னேற்ற மாவட்டக் கழகங்கள் சார்பில் தோழமைக் கட்சிகளிடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வருகின்றது. விரைந்து அந்தந்த மாவட்டக் கழகங்கள் சார்பில் பட்டியல் வெளியிடப்படும். என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Related Stories: