காரைக்குடி சாலைகளில் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தும் மாடுகள் : அபராதம் விதித்தால்தான் கட்டுப்படுத்த முடியும்

காரைக்குடி, :  காரைக்குடி சாலைகள், தெருக்களில் சுற்றித்திரியும் மாடுகள், ஆடுகளால் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுகிறது. சிவகங்கை மாவட்டத்தில் காரைக்குடி வேகமாக வளர்ந்து வரும் நகரும். இப்பகுதி சாலைகள், தெருக்களில் சுற்றித்திரியும் கால்நடைகள் பெரும் இடையூறை ஏற்படுத்துகிறது. குறிப்பாக காரைக்குடி சாலைகளான செக்காலை ரோடு, 100 அடி சாலை, கல்லூரி சாலை, வஊசி சாலை உள்ளிட்ட முக்கிய சாலைகளில் மாடுகள், ஆடுகள் அதிகளவில் சுற்றித்திரிவதால் போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கும் இடையூறாக உள்ளது. காரைக்குடியின் பல்வேறு பகுதிகளில் பொதுமக்களால் வளர்க்கப்படும்

ஆடுகள், மாடுகள் பெரும்பாலும் காலை வேளைகளில் அவிழ்த்து விடப்படுகின்றன, அவை மேய்ச்சலுக்காக காரைக்குடியின் மைய பகுதில் உள்ள சாலைகளிலும், தெருக்களிலும் சுற்றித்திரிகிறது இதனால் பல்வேறு இடையூறுகள் ஏற்படுகின்றன. சில நேரங்களில் சாலைகளை மறித்து கொண்டு மாடுகள் அமர்ந்து கொள்கின்றன. இதனால் பள்ளி மற்றும் கல்லூரி செல்லும் மாணவ மாணவிகள் பெரும் அவதிக்குள்ளாகின்றனர். சில நேரங்களில் மாடுகள் ஒன்றுக்கொன்று முட்டி மோதி சாலைகளில் செல்லுவோர் மீது விழுந்து பலரை படுகாயப்படுத்திய நிகழ்வுகளும் நடைபெற்று வருகிறது. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் பத்திற்க்கும் அதிகமான எருமை மாடுகள் ரஸ்த்தா ரயில் பாதையை கடக்க முற்படும் போது ரயில் மோதி அனைத்து மாடுகளும் இறந்தன. இதுபோல்  வாகனங்களில் அடிபட்டு மாடுகள் இறந்து வருவதும் தொடர்கதையாக உள்ளது. எனவே காரைக்குடி நகராட்சி நிர்வாகம் சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளையும், கால்நடைகளையும் பிடித்து அபராதம் விதித்தால் மட்டுமே கட்டுப்படுத்த முடியும் என சமூகஆர்வலர்கள் தெரிவித்தனர்.

Related Stories: