புதர்மண்டி கிடக்கும் அங்கன்வாடி மையம்: பெற்றோர் பீதி

திருப்பூர், :திருப்பூர், அவினாசி நகர் பகுதியில் உள்ளஅங்கன்வாடி மையம்  புதர்மண்டி கிடப்பதால், குழந்தைகள் பாதுகாப்பு கேள்வி குறியாக உள்ளது என பெற்றோர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.திருப்பூர் மாநகராட்சி இரண்டாவது மண்டலம், புதிய 7வது வார்டு அவினாசி நகரில் அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு, அருகில் உள்ள பல்வேறு பகுதிகளை சேர்ந்த 25 குழந்தைகள் படித்து வருகிறார்கள். அங்கன்வாடி மைய கட்டிடம் ரோடு மட்டத்தில் இருந்து சுமார் இரண்டரை அடி பள்ளத்தில் அமைந்துள்ளது. இதனால், சிலநாட்களுக்கு

கட்டிடத்தை சுற்றிலும் புதர் மண்டிக்கிடப்பதால் குழந்தைகள் எந்நேரமும் வகுப்பறையில் அச்சத்துடனே அமர்ந்திருக்க வேண்டியுள்ளது. மேலும் அவ்வப்போது அங்கன்வாடி பகுதியில் விஷஜந்துகள் நடமாட்டம் இருப்பதாக கூறப்படுகிறது. இப்பிரச்னைகளை அப்பகுதி மக்கள் கடந்த 2 வாரமாக மாநகராட்சி அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. கூலி வேலைக்கு செல்லக்கூடிய பொதுமக்கள் தனியார் பள்ளிகளில் படிக்க வைக்க இயலாமல் அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளை சேர்த்தால், தற்போது குழந்தைகள் பாதுகாப்பு விஷயத்தில்

மாநகராட்சி அதிகாரிகளின் அக்கறை இல்லாமல் இருப்பது பெற்றோர்களிடமும், அப்பகுதி மக்களிடமும் மிகுந்த கோபத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதுமட்டுமல்லாது  பொது மக்களிடமிருந்து அடிப்படை பிரச்னை குறித்த எந்த கோரிக்கை வந்தாலும் 2 மண்டல அதிகாரிகள் மிகுந்த மெத்தனமாகவே செயல்படுகிறார்கள். இதன் மீது தகுந்த நடவடிக்கை எடுத்து அங்கன்வாடி மையத்தை சீரமைத்து தராவிட்டால் குழந்தைகள் உயிருக்கே ஆபத்து ஏற்படும். ஆகையால், போர்க்கால அடிப்படையில் அங்கன்வாடி மையத்தை சீரமைக்க வேண்டும் இல்லையெனில் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட போவதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.

Related Stories: