புதுக்கோட்டை மாவட்டத்தில் 280 துப்பாக்கிகள் காவல் நிலையங்களில் ஒப்படைப்பு

புதுக்கோட்டை, : தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால் மாவட்டத்தில் உள்ள துப்பாக்கிகளை உரிமையாளர்கள் அந்தந்த பகுதியில் உள்ள காவல் நிலையங்களில் ஒப்படைத்து வருகின்றனர்.தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் இரண்டு கட்டகளாக நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. வரும் 27ம் தேதி முதல் கட்டமாகவும், இரண்டாம் கட்டமாக 30ம் தேதியும் நடைபெறுகிறது. குறிப்பாக ஊராட்சி ஒன்றியம் மற்றும் மாவட்ட ஊராட்சி உள்ளிட்டவற்றிக்கு மட்டுமே தேர்தல் நடைபெற உள்ளது. இதன்படி புதுக்கோட்டை மாவட்டத்தில் இரண்டு கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 13 ஊராட்சி ஒன்றியங்களில் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உரிமம் பெற்று (லைசென்ஸ்) 611 துப்பாக்கிகள் உள்ளது. தேர்தல் நேரத்தில் அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல் இருக்க துப்பாக்கிகளை உரிமையாளர்களிடம் அந்தந்த காவல்நிலையங்களில் ஒப்படைத்து தேர்தல் முடிந்து தேர்தல் நடத்தை விதிகள் நீக்கம் பெற்றபிறகு துப்பாக்கிகளை பெற்று செல்லாம் என்று அறிவுறுத்தப்பட்டது. இதனையடுத்து துப்பாக்கியின் உரிமையாளர்கள் துப்பாக்கிகளை ஒப்படைத்து வருகின்றனர்.இதுவரை மாவட்டம் முழுவதிலும் இருந்து 280 துப்பாக்கிகளை அந்தந்த காவல் நிலையங்கயில் ஒப்படைத்துள்ளனர். மீதம் உள்ள துப்பாக்கிகள் இன்னும் சிலநாட்களில் ஒப்படைக்கப்பட்டுவிடும் என்று போலீசார் தெரிவித்தனர்.

Related Stories: