×

164 ஆண்டுகள் பழமையான நீராவி என்ஜின் ரயில்: சென்னை எழும்பூரில் இருந்து கோடம்பாக்கம் வரை இயக்கம்

சென்னை: சென்னை எழும்பூரில் இருந்து கோடம்பாக்கத்துக்கு நீராவி என்ஜின் ரயில் இயக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இரயில் வழி சேவை ஆரம்பித்த போது நீராவி இஞ்சின்களே புழகத்தில் இருந்தன. அப்போது 1855ம் ஆண்டு தயாரான இஞ்சின்தான் ’இஐஆர்21’. சுமார் 50 ஆண்டு காலத்திற்கும் மேலாக இந்தியாவின் பல ரயில் வழி பாதைகளில் பயணித்த இந்த இஞ்சின் நிலக்கரி இஞ்சின்களின் வருகைக்கு பிறகு அருங்காட்சியகத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.பிறகு சமீபத்தில் சென்னைக்கு கொண்டு வரப்பட்டு புதுப்பொலிவு பெற்ற நீராவி இஞ்சின் வருடத்தில் இரண்டு முறை மட்டும் மக்களின் பார்வைக்காக இயக்கப்படுகிறது.

அந்த வகையில் நாளை எழும்பூர் முதல் கோடம்பாக்கம் வரை தனது பயணத்தை தொடங்கி இருமுறை பயணித்து முடித்து கொள்ள இருக்கிறது ‘இஐஆர்21’.எழும்பூரிலிருந்து காலை 11 மணிக்கு புறப்படும் இந்த ரயில் 12.15 மணிக்கு கோடம்பாக்கம் சென்றடையும். மறு மார்க்கத்தில் மதியம் 12.45 மணிக்கு கோடம்பாக்கத்தில் புறப்பட்டு 2 மணிக்கு எழும்பூர் வந்தடையும். 12 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகள் ஒரு மார்க்கத்தில் பயணம் செய்ய 300, இரண்டு மார்க்கத்தில் பயணம் செய்ய ₹600 கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

உணவுகளுடன் சேர்த்து ஒரு மார்க்கத்திற்கு 565, இரண்டு மார்க்கத்திற்கு 865 கட்டணம் செலுத்த வேண்டும்.பெரியவர்கள் ஒரு மார்க்கத்தில் பயணம் செய்ய 500, இரண்டு மார்க்கத்தில் பயணம் செய்ய 1000, உணவுடன் சேர்த்து ஒரு மார்க்கத்தில் பயணம் செய்ய 765, இரண்டு மார்க்கத்தில் பயணம் செய்ய 1265 கட்டணம் நிர்யணம் செய்யப்பட்டுள்ளது.  பொதுமக்கள் எழும்பூர் ரயில் நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு கவுன்டர்களில் டிக்கெட்டுகளை பெற்று கொள்ளலாம்.

Tags : Chennai Egmore ,Kodambakkam , Steam, engine rail, goddamnbox, mobility
× RELATED சென்னை – கோவை இடையே நாளை மறுநாள் சிறப்பு ரயில்!!