2 மகள்களை 20 ஆயிரத்துக்கு விற்ற தாய்

திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே உள்ள வெள்ளங்குளம் கிராமத்தை சேர்ந்தவர் காளியப்பன்(40). கூலி தொழிலாளி. இவரது மனைவி தனலட்சுமி(35). இவர்களுக்கு கவிதா(12), சங்கீதா(11) என்ற மகள்கள் உள்ளனர். அந்த பகுதியில் உள்ள அரசு பள்ளியில் கவிதா 6ம் வகுப்பும், சங்கீதா 5ம் வகுப்பும் படித்து வந்தனர். வறுமை காரணமாக கடந்த மாதம் 20ம் தேதி நீடாமங்கலத்தை சேர்ந்த பெண் புரோக்கர்கள் சகுந்தலா, கனகம் ஆகியோர் மூலம் 2 மகள்களையும்  தலா 10 ஆயிரத்துக்கு தனலட்சுமி விற்றுள்ளார். அவர்கள், கோவையை சேர்ந்த தொழிலதிபர் ஒருவரிடம் விற்றுள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த குடவாசல் போலீசார் காளியப்பன், தனலட்சுமியை காவல்நிலையத்திற்கு வரவழைத்து விசாரித்தனர். இதில் மகள்கள் விற்கப்பட்டதை பெற்றோர் ஒப்புக்கொண்டனர். கோவையில் உள்ள ஒரு ஸ்பின்னிங் மில்லில் 2 சிறுமிகளும் வேலைபார்ப்பது தெரியவந்தது. அவர்களை மீட்க கோவை விரைந்துள்ளனர்.


Tags : daughters , Mother ,sold 2 daughters,20 thousand
× RELATED மகள்களுக்கு பாலியல் தொல்லை...