5 பேர் சாவு பரிசல் ஓட்டிக்கு 5 ஆண்டு சிறை

சத்தியமங்கலம்: நீலகிரி மாவட்டம் குன்னூரை சேர்ந்தவர்கள் ஆலன் பிரான்சிஸ் (22), ஆசா ஜெனிபர் (25), ஜோசப் பவுல்ராஜ் (32), ஜார்ஜ் அர்வின் (16). இவர்கள் 4 பேரும் கடந்த 2017ம் ஆண்டு ஜனவரி  15ம் தேதி  ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அருகே கொத்தமங்கலத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு வந்தனர்.

பவானி ஆற்றில் பரிசல் சவாரி சென்ற போது அதில் ஓட்டை இருந்ததால் தண்ணீர் புகுந்து கவிழ்ந்தது. இதில், ஆலன்பிரான்சிஸ், ஆசாஜெனிபர், ஜோசப் பவுல்ராஜ், ஜார்ஜ் அர்வின் ஆகிய 4 பேரும் இறந்தனர். இதுகுறித்து பவானிசாகர் போலீசார், டேவிட் லாரன்சை கைது செய்தனர். இதுதொடர்பான வழக்கு கோபி  நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி பரிசல் ஓட்டி டேவிட்லாரன்சுக்கு 5 ஆண்டு சிறை விதித்து தீர்ப்பளித்தார்.

Tags : death ,prison , 5 sentenced ,5 years , prison for death
× RELATED அவிநாசி விபத்தில்...