கல் குவாரியில் பதுக்கிய 784 டெட்டனேட்டர் பறிமுதல்

பரமத்திவேலூர்: நாமக்கல்  மாவட்டம், பரமத்திவேலூர் அடுத்துள்ள சுள்ளிப்பாளையத்தில், தனியாருக்கு  சொந்தமான கிரானைட் கல் குவாரி இயங்கி வருகிறது. இந்த குவாரியில்  பாறைகளுக்கு வெடி வைப்பதற்கு பயன்படுத்தப்படும் வெடி பொருட்களை அனுமதியின்றி பதுக்கி  வைத்திருப்பதாக, போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து  பரமத்திவேலூர் போலீசார், நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
 
அப்போது கல் குவாரியில் 184 எலக்ட்ரிக் டெட்டனேட்டர்கள், 600  சாதாரண டெட்டனேட்டர்கள் ஆகியவை அனுமதியின்றி பதுக்கி வைக்கப்பட்டிருந்தது  கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, அவற்றை பறிமுதல் செய்த போலீசார்,  கல் குவாரியின் சூப்பர்வைசர் ராஜசேகரை கைது  செய்தனர். மேலும், விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Detonator ,stone quarry ,784 Detonator , 784 Detonator confiscated , stone quarry
× RELATED அவிநாசி விபத்தில்...