பொருளாதார வளர்ச்சிக்கு ஆலோசனை ‘என் அடுத்த டார்கெட் இலங்கையின் நல்லை ஞானசம்பந்தர் ஆதினம்தான்’: நித்தியானந்தா அடுத்த ‘லகலகலக’

புதுடெல்லி: ‘‘எனது அடுத்த டார்கெட் இலங்கையில் உள்ள நல்லை திருஞானசம்பந்தர் ஆதினம்தான்’’ என்று நித்தியானந்தா தனது வீடியோவில் கூறியுள்ளார். சமூக வலைதளங்களில் வரும் மீம்ஸ்களுக்கு போட்டியாக, நித்தியானந்தாவின் வீடியோக்கள் தினமும் டிரெண்டிங் ஆகி வருகிறது. அவர் பிரசங்கம் செய்து வெளியிடும் வீடியோக்கள், சிரிப்பை வரவழைப்பதால், பெருமளவில் பார்வேர்டு செய்யப்பட்டு வருகின்றன. இந்த வகையில் நித்தியானந்தா புது வீடியோவில் கூறியிருப்பதாவது:கைலாசா சிவத்தை உணர்ந்தால், உங்களுக்குள்ளும் கைலாசா உருவாகும். என் அடுத்த இலக்கு இலங்கையில் உள்ள நல்லை திருஞான சம்பந்தர் ஆதீனம்தான். அயோத்தியில் ராமர் கோயில் கட்டினால், இந்தியாவில் பொருளாதாரம் செழிக்கும்.

ஏனெனில் சமூகத்துக்கு பங்களிப்பது தான் ராமரின் கொள்கை. அயோத்தி ராமர் கோயில் கட்ட யார் நிதி அளித்தாலும் அது இந்திய பொருளாதாரத்துக்கு பங்களிப்பது ஆகும். என்னுடைய சீடர்களும் சந்நியாசிகளும் முடிந்த அளவுக்கு ராமர் கோயில் கட்டுமானத்தில் பங்களிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். நானும் ராமர் கோயில் கட்ட உதவுவேன். ராவணன் நேரடியாக கைலாசத்தை தொட்டு தூக்க முயன்றான். கைலாசத்தில் உள்ள சிந்தாமணி மண்டபம்தான் அதன் அருள் பொலிவுக்கு காரணம் என்று நினைத்துவிட்டான். உடனே எனக்கு அந்த மண்டபம் வேண்டும் என சிவனிடம் கேட்டான். சிவனும் எடுத்துக்கொள் என்றார். இந்த முட்டாள் ராவணனும் அந்த சிந்தாமணி மண்டபத்தை எடுத்து இலங்கையில் வைத்தான் என்று கூறியுள்ளார்.

Related Stories: