×

ஏற்றுமதி இறக்குமதி 4வது மாதமாக கடும் சரிவு

புதுடெல்லி:  கடந்த மாதம் ஏற்றுமதி 0.34 சதவீதம் சரிந்து 2,598 கோடி டாலராக உள்ளது. பெட்ரோலியம், நவரத்தினம், ஆபரணங்கள், தோல் பொருட்கள் இறக்குமதி சரிவே இதற்கு காரணம். மொத்தம் உள்ள முக்கிய 30 தொழில்துறைகளில் 17 துறைகளின் ஏற்றுமதி சரிந்துள்ளது. பெட்ரோலிய பொருட்கள் (13.12%), நவரத்தினம் மற்றும் ஆபரணங்கள் (8.14%), பழங்கள் மற்றும் காய்கறிகள் (15.10%),  தோல் மற்றும் தோல் பொருட்கள் (5.29%), ரெடிமேட் ஆடைகள் (6.52%) சரிந்துள்ளது.  இதுபோல், இறக்குமதி 12.71% சரிந்து 3,811 கோடி டாலராக உள்ளது. எண்ணெய் இறக்குமதி 18.17%, எண்ணெய் சாராத பொருட்கள் இறக்குமதி 10.26% சரிந்துள்ளது.  அதேநேரத்தில், தங்கம் இறக்குமதி 6.59% உயர்ந்துள்ளது. நடப்பு நிதியாண்டில் கடந்த ஏப்ரல் முதல் நவம்பர் வரை ஏற்றுமதி 1.99 சதவீதம் சரிந்து 21,193 கோடி டாலராகவும், இறக்குமதி 8.91 சதவீதம் சரிந்து 31,878 கோடி டாலராகவும் உள்ளது என மத்திய அரசு வெளியிட்ட புள்ளி விவரத்தில் கூறப்பட்டுள்ளது.


Tags : businesses , Subsidy scheme, small businesses, industrial
× RELATED சிறு வணிகர்களுக்கான வணிக வரி சமாதான...