பொருளாதார சரிவால் முக்கிய 8 நகரங்களில் வீடு விற்பனை தேக்கம்

புதுடெல்லி: முக்கிய 8 நகரங்களில் கட்டப்பட்ட மலிவு விலை மற்றும் நடுத்தர வீடுகளில் 40 சதவீத வீடுகள் விற்பனை ஆகாமல் தேங்கி கிடக்கின்றன.  பொருளாதார மந்த நிலை காரணமாக தொழில்துறைகள் நசிந்து விட்டன. பல லட்சம் பேர் வேலை இழந்து விட்டனர்.  இதனால் மக்கள் செலவு செய்வது குறைந்து விட்டது. இது, ரியல் எஸ்டேட் துறையையும் பாதித்துள்ளது. இதனால் சென்னை, டெல்லி உள்ளிட்ட முக்கிய 8 நகரங்களில் 40 சதவீத வீடுகள் விற்பனை ஆகாமல் தேங்கியுள்ளன.  நிதியமைச்சக புள்ளி விவரப்படி, டெல்லி என்சிஆர், மும்பை எம்எம்ஆர், பெங்களூருவில் கட்டப்பட்ட 4.6 லட்சம் வீடுகளில் 1.8 லட்சம் வீடுகள் விற்கவில்லை. சதவீத அடிப்படையில் கணக்கிடும்போது, புனே, ஐதராபாத், சென்னை, கொல்கத்தா மற்றும் அகமதாபாத்தில் விற்பனை தேக்கம் அதிகம். இவற்றில் பெரும்பாலானவை நடுத்தர மற்றும் மலிவு விலை வீடு பிரிவுகள்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: