விளையாட்டு துளிகள்

* இந்திய அணி கேப்டன் விராத் கோஹ்லியை போன்று களத்தில் கடுமையாக உழைக்க வேண்டும் என்று வெஸ்ட் இண்டீஸ் வீரர்களிடம் அந்த அணியின் துணை பயிற்சியாளர் ரோடி எஸ்ட்விக் வலியுறுத்தி உள்ளார்.

* இளம் வீரர் ஷிவம் துபே தன்னம்பிக்கையுடன் விளையாடத் தொடங்கியிருப்பதால் விரைவில் சிறந்த ஆல் ரவுண்டராக ஜொலிப்பார் என்று இந்திய அணி பந்துவீச்சு பயிற்சியாளர் பரத் அருண் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

* ஊக்கமருந்து சர்ச்சை காரணமாக ரஷ்யாவுக்கு 2020 ஒலிம்பிக்சில் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், அந்நாட்டு வீரர், வீராங்கனைகள் நடுநிலையாகப் பங்கேற்கலாம் என ஒலிம்பிக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

* காயம் காரணமாக ஓய்வெடுத்து வந்த வேகப் பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பூம்ரா முழு உடல்தகுதி பெற்றுள்ள நிலையில், இந்திய அணி வீரர்களுடன் இணைந்து வலைப்பயிற்சியில் ஈடுபடுவார் என கிரிக்கெட் வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

*  வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக நடக்க உள்ள ஒருநாள் போட்டித் தொடரில் இளம் வீரர் ஷ்ரேயாஸ் அய்யர் 4வது வீரராகக் களமிறங்கி விளையாட வேண்டும் என இந்திய அணி முன்னாள் கேப்டன் அனில் கும்ப்ளே விருப்பம் தெரிவித்துள்ளார்.

* மன சோர்வு காரணமாக கிரிக்கெட் விளையாட்டில் இருந்து விலகி இருந்த ஆஸ்திரேலிய அணி ஆல் ரவுண்டர் கிளென் மேக்ஸ்வெல் மீண்டும் களமிறங்கத் தயாராக உள்ளதாக அறிவித்துள்ளார்.

* தென் ஆப்ரிக்க அணியுடன் நடைபெற உள்ள ஒருநாள் போட்டித் தொடருக்கான இங்கிலாந்து அணியில் ஜோப்ரா ஆர்ச்சர், பென் ஸ்டோக்சுக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது.  

* மும்பையில் நேற்று நடைபெற்ற யு-17 மகளிர் கால்பந்து போட்யில் ஸ்வீடன் அணி 3-0 என்ற கோல் கணக்கில் இந்திய அணியை வீழ்த்தியது.

* 2023ம் ஆண்டு பிபா மகளிர் உலக கோப்பை கால்பந்து போட்டித் தொடரை இணைந்து நடத்த ஆஸ்திரேலியா, நியூசிலாந்து நாடுகள் விண்ணப்பித்துள்ளன.

* சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுவிட்ட வெஸ்ட் இண்டீஸ் ஆல் ரவுண்டர் டுவைன் பிராவோ, தனது ஓய்வு முடிவை மாற்றிக் கொண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ள ஐசிசி உலக கோப்பை டி20 தொடரில் விளையாட விருப்பம் தெரிவித்துள்ளார்.

Related Stories: