நித்தியானந்தாவுடன் தொடர்பா? எஸ்.வி.சேகரை அழைத்து விசாரணை நடத்த வேண்டும் : கமிஷனர் அலுவலகத்தில் புகார்

சென்னை: தலைமறைவாக உள்ள நித்தியானந்தாவுடன் தொடர்பில் இருக்கிறாரா என்று நடிகர் எஸ்.வி.சேகரை அழைத்து விசாரணை நடத்த வேண்டும் என்று இந்து யுவ வாஹினி அமைப்பு சார்பில் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் இந்து யுவ வாஹினி அமைப்பின் தலைவர் செல்வம் ேநற்று அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:

பிரபல போலி சாமியார் நித்தியானந்தா இந்து கடவுள்களை இழிவுபடுத்தியும், இவர் தான் கடவுள் போலவும் வெளிநாட்டு நபர்களையும் உள்நாட்டு நபர்களையும் இந்து கடவுள்களையும் வைத்து பணம் மோசடி செய்து வருகிறார். இதுதொடர்பாக  எஸ்.வி.சேகர் பிரபல போலி சாமியாருக்கு உறுதுணையாக காணவில்லை என்று ஊடகங்களை திசைத்திருப்புகிறார். எனவே, நித்தியானந்தாவை பிடிக்க வேண்டும் என்றால், எஸ்.வி.சேகரை கைது செய்ய வேண்டும். போலி சாமியாரான நித்தியானந்தாவிடம் பணம் வாங்கிக் கொண்டு அவரை மீட்க பாடுபடுகிறார் என்று எங்களுக்கு சந்தேகமாக உள்ளது. எனவே அவரை பிடித்து பிரபல போலி சாமியாரையும் எஸ்.வி.சேகரையும் கைது செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : SV Sekar ,Nityananda ,Commissioner ,Office Nityananda , Nityananda?, SV Sekar ,summoned ,investigated
× RELATED அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீதான டெண்டர்...