உள்ளாட்சி தேர்தல் விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் திட்டவட்டம் முந்தைய உத்தரவில் மாற்றம் இல்லை

சென்னை: தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி பகுதிகளுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டு வரும் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. இதை தொடர்ந்து, வேட்புமனு தாக்கல் இன்றோடு நிறைவடைய உள்ளதாக மாநில தேர்தல் ஆணையத்தின் தரப்பில் குறிப்பிடப்பட்டது. மேலும், உள்ளாட்சி தேர்தலில் வார்டு மறுவரையறை மற்றும் இடஒதுக்கீடு என்பது பஞ்சாயத்து சட்ட விதிகளின் அடிப்படையில் அனைத்தும் பின்பற்ற வேண்டும் என்றும், இதில் புதிதாக தொடங்கப்பட்ட 9 மாவட்டங்களுக்கும் அடுத்த மூன்று மாதத்தில் அனைத்து பணிகளையும் முடித்து தேர்தலை நடத்த வேண்டும் என திமுக தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் கடந்த 11ம் தேதி உத்தரவிட்டிருந்தது.  நீதிபதி பிறப்பித்த உத்தரவில், “தமிழக உள்ளாட்சி தேர்தல் விவகாரத்தில் உத்தரவு தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது. அதில் மீண்டும் தலையிட விரும்பவில்லை. அதனால் முந்தைய உத்தவின் அடிப்படையில் தேர்தலை நடத்தலாம்’’ என்றார்.

Related Stories: