தரமான பொருட்கள் கிடைக்க தினகரன் உணவு திருவிழா உதவும் : நிறுவனங்களின் நிர்வாகிகள் தகவல்

சென்னை: நந்தம்பாக்கத்தில் நடைபெறும் தினகரன் உணவு திருவிழா மூலம் தரமான உணவு பொருட்கள் கிடைக்கும் என்று நிறுவனங்களின் நிர்வாகிகள் தெரிவித்தனர். எவரெஸ்ட் மசாலா சென்னை மண்டல மேலாளர் சுரேஷ்பாபு:  எங்களது தயாரிப்புகள் 60 நாடுகளில் விற்பனையாகிறது. சைவம் மற்றும் அசைவ உணவுகளில் சேர்க்கப்படும் மசாலாக்கள் தயாரித்து விற்பனை செய்யப்படுகிறது.  இந்த உணவு கண்காட்சியை முன்னிட்டு சலுகைகள், சிறப்பு பரிசுகள் மற்றும் தள்ளுபடியில் விற்பனை செய்கிறோம். மூன்று நாட்களுக்கு சாம்பார் இட்லி, வெஜ் பிரியாணி போன்றவை மாலை நேரத்தில் கண்காட்சியை பார்க்க வரும் வாடிக்கையாளர்களுக்கு வழங்க உள்ளோம். சன் இண்டஸ்ட்ரீஸ் எம்.வி.எம் கூட்டு பெருங்காயம் உரிமையாளர் ரமேஷ்குமார்:  மக்களுக்கு தரமான பெருங்காயத்தை தயார் செய்து வழங்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்காக தான் ஆப்கானிஸ்தான் காடுகளில் இருந்து நேரடியாக மூலப் பொருட்களை கொள்முதல் செய்து விற்பனை செய்து வருகிறோம். உணவு திருவிழாவை முன்னிட்டு ஒவ்வொரு 50 கிராம் பெருங்காயத்திற்கும் 30 மதிப்புள்ள கான்பிளவர் இலவசமாக வழங்கப்படும்.

பீதாம்பரி தலைமை விற்பனை பிரிவு மேலாளர் வேலு முருகன்:  எங்களுடைய நிறுவனத்தின் சார்பில் வீடுகள் மற்றும் அலுவலகங்கள், கழிவறைகள் போன்றவற்றை சுத்தம் செய்ய தேவைப்படும் பொருட்கள் தரமான முறையில் தயார் செய்து விற்பனை செய்யப்படுகிறது. 10 முதல் 130 வரை விலையில் வீட்டுக்கு தேவையான பொருட்கள் கிடைக்கும். மூன்று நாட்கள் நடைபெறும் இந்த உணவு திருவிழா கண்காட்சியில் வாங்கப்படும் ஒவ்வொரு பொருட்களுக்கும் சிறப்பு தள்ளுபடி வழங்கப்படும். தன்யா அசோசியேட் திவ்யா பார்த்தசாரதி:  எங்களுடைய நிறுவனம் சார்பில் வீட்டிற்கு தேவைப்படும் மூன்று வகையான ஆலிவ் ஆயில் தயார் செய்து விற்பனை செய்து வருகிறோம். எக்ஸ்ட்ரா வர்ஜின் என்ற ஆயில் பயன்படுத்தினால் கிட்னி, நுரையீரல் சம்பந்தமான அனைத்து நோய்களில் இருந்தும் விடுபடலாம். ஆலிவ் ஆயில் மூலம் குழந்தைகளுக்கு மசாஜ் செய்தால் குழந்தைகள் ஆரோக்கியமாகவும், உடல்நலத்துடன் இருப்பார்கள். 10 சதவீதம் முதல் 50 சதவீதம் வரை தள்ளுபடி விலையில் விற்பனை செய்கிறோம்.

மிஷின் குரூப் ஆப் நிறுவனத்தின் பொது மேலாளர் பைரோஸ் நிஷா:  எங்கள் நிறுவனத்தின் சார்பில் வீட்டுக்கு தேவையான ஆயில் அரைக்கும் மிஷின், பேப்பர் கவர் இயந்திரம் உள்பட 8 வகையான மிஷின்கள் தயார் செய்து விற்பனை செய்து வருகிறோம். வீட்டிற்கு தேவையான ஆயிலை அரைத்துக்கொள்ள தேவையான சிறிய அளவிலான மிஷின்கள் உள்ளன. இந்த உணவு கண்காட்சியை முன்னிட்டு இங்கு வந்து வாங்குவோர் மற்றும் புக்கிங் செய்பவர்களுக்கு உத்தரவாதம் மற்றும் தள்ளுபடி விலையில் விற்பனை செய்யப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags : Dinakaran Food Festival ,executives ,companies , Dinakaran Food Festival, get quality ingredients
× RELATED தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனை விறுவிறு