இந்தியா-மேற்கு இந்திய தீவு அணிகள் மோதும் கிரிக்கெட் சேப்பாக்கம் மைதானம் முழுவதும் 3 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு

சென்னை:  சென்னை, சேப்பாக்கம் மைதானத்தில் இந்தியா- மேற்கு இந்திய தீவு அணிகளுக்கு இடையேயிலான கிரிக்கெட் போட்டி நாளை நடக்கிறது. அப்போது எந்தவிதமான அசம்பாவிதமும் நடைபெறாமல் இருக்கும் வகையில் மைதானம் முழுவதும் மோப்ப நாய்கள் உதவியுடன் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை செய்தனர். மேலும் ரசிகர்கள் எந்தவிதமான இடையூறுகளும் ஏற்படுத்தாத வகையில் வாகனங்களை எங்கே நிறுத்த வேண்டும், எந்த நுழைவாயில் வழியாக அனுமதிக்க வேண்டும் என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

மேலும் மைதானத்தில் உள்ள சிசிடிவி கேமராக்கள் முழுவதும் காவல் சிறப்பு கண்காணிப்பு அறையுடன் இணைக்கப்பட்டு இன்ஸ்பெக்டர் தலைமையிலான போலீசார் கண்காணிக்க உள்ளனர். உள்ளூர் போலீசார், ஆயுதப்படை போலீசார் உட்பட 3 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இதையடுத்து போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவின் பேரில் இணை கமிஷனர் சுதாகர் தலைமையிலான போலீசார் மைதானத்தில் போடப்பட்டுள்ள பாதுகாப்பு குறித்து நேற்று ஆய்வு மேற்கொண்டனர். மேலும் மைதானத்திற்கு வரும் ரசிகர்கள் தடை செய்யப்பட்ட பொருட்களை கொண்டு செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள். அவர்கள் பலத்த சோதனைக்கு பிறகுதான் மைதானத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள். அதையும் மீறி தடை செய்யப்பட்ட ெபாருட்கள் கொண்டு செல்லப்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளனர்.   

Related Stories: