பெர்த்: ஆஸ்திரேலிய அணியுடனான முதல் டெஸ்டில் (பகல்/இரவு), நியூசிலாந்து முதல் இன்னிங்சில் 5 விக்கெட் இழப்புக்கு 109 ரன் எடுத்து திணறி வருகிறது. பெர்த் ஸ்டேடியத்தில் நடந்து வரும் இப்போட்டியில், டாசில் வென்று பேட் செய்த ஆஸ்திரேலிய அணி முதல் நாள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 248 ரன் எடுத்திருந்தது. வார்னர் 43, பர்ன்ஸ் 9, ஸ்மித் 43, மேத்யூ வேடு 12 ரன்னில் ஆட்டமிழந்தனர். மார்னஸ் லாபுஷேன் 110. ஹெட் 20 ரன்னுடன் நேற்று ஆட்டத்தை தொடர்ந்தனர்.லாபுஷேன் 143 ரன் (240 பந்து, 18 பவுண்டரி, 1 சிக்சர்), ஹெட் 56 ரன் எடுத்து வெளியேற, அடுத்து வந்த கேப்டன் டிம் பெய்ன் 39, கம்மின்ஸ் 20, ஸ்டார்க் 30, லயன் 8 ரன்னில் பெவிலியன் திரும்பினர். ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 416 ரன் குவித்து ஆல் அவுட்டானது (146.2 ஓவர்). நியூசிலாந்து பந்துவீச்சில் சவுத்தீ, வேக்னர் தலா 4, கிராண்ட்ஹோம், ராவல் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.