நாடு முழுவதும் 100 காடுகள் அமெரிக்க சீக்கியர்கள் உறுதி

வாஷிங்டன்: ‘இந்தியாவில் 100 காடுகள் அமைப்பதற்கு ஆதரவு அளிக்கப்படும்,’ என அமெரிக்காவை சேர்ந்த சீக்கியர்கள் உறுதிமொழி ஏற்றுள்ளனர்.  அமெரிக்காவை சேர்ந்த சீக்கிய சுற்றுச்சூழல் அமைப்பு சார்பில் 7வது காலா நிகழ்ச்சிவாஷிங்டனில் ேநற்று முன்தினம் நடந்தது. இந்த நிகழ்ச்சியின்போது காலநிலை மாற்றத்துக்கு எதிராக போராடும் வகையில் குருநானக் புனித காடுகளை இந்தியாவின் பஞ்சாப் மாநிலம் மற்றும் உலகெங்கும்  அமைப்பதற்காக ஆதரவு அளிக்கப்படும் என்று கூறி உறுதிமொழி ஏற்றனர். இது தொடர்பாக சீக்கிய சுற்றுச்சூழல் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘இந்தியாவில் 100 குருநானக் புனித காடுகள் அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது.

இதன் மூலம், சீக்கிய சுற்றுச்சூழல் அமைப்பானது குருநானக்கின் 550வது பிறந்த நாளையொட்டி 10 லட்சம் மரக்கன்றுகள் நடும் இலக்கை அடையும். பஞ்சாப், அரியானா, ராஜஸ்தான், மகாராஷ்டிரா, குஜராத், டெல்லி, ஜம்மு மற்றும் சண்டிகர் உள்ளிட்ட இடங்களில் 550 மரங்களுடன் 120 மினி காடுகள் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், பஞ்சாப் மற்றும் இந்தியாவின் பிற பகுதிகளில் இயற்கை ஏற்றத்தாழ்வுகள் சரி செய்யப்படும். காடுகளை உருவாக்குவது என்பது நமது சிறந்த எதிர்காலத்துக்கான நல்ல முதலீடாகும்,’ என குறிப்பிடப்பட்டுள்ளது.  தலைவர் ராஜ்வான்ட் சிங் கூறுகையில், “பருவநிலை மாற்ற  பிரச்னையை சரி செய்ய அனைத்து மதத்தினரும் முன்வர வேண்டும்,” என்றார்.

Related Stories: