கலெக்டர் அலுவலகம் அருகே குடியுரிமை சட்டத்திருத்த நகல் எரிப்பு: 30 பேர் கைது

தண்டையார்பேட்டை: குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வடகிழக்கு மாநிலங்களில் தீவிர போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இதன் தொடர்ச்சியாக, தமிழகத்திலும் அரசியல் கட்சியினர், மாணவர் அமைப்பினர் போராட்ட களத்தில் இறங்கியுள்ளனர். இந்நிலையில், நேற்று காலை சென்னை மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் 50க்கும் மேற்பட்ட ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டு, இஸ்லாமியர்கள் மற்றும் இலங்கை தமிழர்களுக்கு எதிரான குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தியும், இதற்கு ஆதரவு தெரிவித்த தமிழக அரசை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர்.

பின்னர், குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவின் நகலை இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாநில பொருளாளர் கீதா தலைமையில் ஏராளமான தொண்டர்கள் தீயிட்டு கொளுத்தினர். தகவலறிந்து வந்த போலீசார், போராட்டத்தில் ஈடுபட்ட 30க்கும் மேற்பட்டவர்களை கைது செய்து, அவர்களை அங்குள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் அடைத்து வைத்து, மாலையில் விடுதலை செய்தனர்.

Related Stories: